Cinema News Stories

த்ரில் ‘பகீரா’ டீஸர் இதோ !!!!

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்த பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ திரைப்படத்தின் டீஸர் Youtube-ல் இன்று (பிப்ரவரி 19) வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீஸர் link -ஐ நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, சிம்புவின் ‘AAA’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்தர் தான் ‘பகீரா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து அமீரா டஸ்ட்டர், ஜனனி ஐயர், ரம்யா நம்பீஸன், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சோனியா அகர்வால் என ஒரு நடிகைகளின் பட்டாளமே நடித்துள்ளது. அவர்கள் மட்டுமின்றி சாய் குமார், நாசர், பிரகதி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீஸர்-ஐ வைத்து பார்க்கும் போது இப்படம் ஒரு Psycho திரில்லர் படமாக இருக்கும் என தெரிகிறது. அதுமட்டுமின்றி படத்தில் பிரபு தேவா இரட்டை வேடத்தில் நடித்திருப்பாரோ என்ற சந்தேகமும் தோன்றுகிறது. இப்படத்தின் டீஸரில் பிரபுதேவாவிற்கு பிரபு, தேவா, பகீரா என மூன்று கதாபாத்திரங்கள் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது.

‘பகீரா’ என்ற கதாபாத்திரம் ஒருவேளை ஒரு அமானுஷ்ய கதாபாத்திரமாக இருக்குமோ என்ற சந்தேகமும் teaser-ஐ பார்க்கும்போது நமக்கு ஏற்படுகிறது. வெறும் 2 நிமிட டீஸர் வீடியோவிலேயே பிரபுதேவா பல வேடங்களில் தோன்றுகிறார். இந்த டீஸர் வீடியோ பல சந்தேகங்களை ஏற்படுத்துவதோடு சேர்த்து, ‘பகீரா’-வை விரைவில் திரையில் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பகீரா திரைப்படத்தின் டீஸர்-ஐ கீழே காணுங்கள்.

About the author

alex lew