Bharathiyar Facts – “நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா” என்று வரி அமைத்த பாரதியிடம், என்னை சரணடைய செய்ததை நான் என்னவென்று சொல்ல யோசித்து, எழுதுகிறேன் இதோ, 143 வருடம் மட்டுமில்லை இன்னும் எத்துணை நூற்றாண்டு கடந்தாலும் மகாகவியின் கவிநயமிக்க பாடல்களும் கவிதைகளும் நம் மனதை கட்டி இழுக்கும்.
தேசபக்தி, தெய்வபக்தி, சுதந்திர உணர்வு, சமூக மாற்றம், பெண் விடுதலை, தமிழ்மொழிப்பற்று, காதல் என ஒவ்வொரு மானுடன் மனதில் எழும் எண்ண அலைகளை, ஆழமான பதிய வைக்கும் வகையில், வார்த்தைகள் பிரயோகித்து பொன்போன்ற வரிகள் அமைத்து பாடலாகவும் கவிதைகளாகவும் படைத்த நம் ஷெல்லிதாசன் பாரதி.
Gen z generation இல் தொடங்கி Gen Alpha, Gen Beta…Millennials வந்தாலும் அன்றும் “காயங்கள் குணமாக காலம் காத்திரு, கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு!” போன்ற பாரதியின் வீர வரிகளை காலங்கள் டந்தும் போற்றுவோம், சோர்ந்த போதெல்லாம் நம்மை நாமே தேற்றுவோம். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் வரிகளும், இத்துணை சக்தியுடன் மனித சக்தியின் சுதந்திர உணர்வை தூண்டுமா?
பாடல் தொடுத்து பத்திரிகை தொடங்கி பாமரன் உள்ளத்திலும் சுதந்திர தீயை மூடினார் நம் முண்டாசு கவிஞன் பாரதி. பக்தியோடு அழைக்கவா இல்லை பாசத்தோடு அழைக்கவா என்று எண்ணினால் கண்ணம்மா, என்றே அழைக்கலாம் என்று சொல்லலாம். கண்ணன் பாட்டிலும், தேவி பாட்டிலும், காதலிக்காக பாடியதிலும் கண்ணம்மா என்றே குறிப்பிட்டார் காளிதாசன் பாரதி.
இன்றளவும் பல திரைப்பட பாடல்களில் கண்ணம்மா என்றே காதலியை குறிப்பிட பாரதியின் கவிதைகளும் பாடல்களும் காரணமாய் விளங்கின. கண்ணம்மா கற்பனை கதாபாத்திரமாய் இருந்தாலும், இளைஞர்களின் கனவு நாயகியாக குறிப்பிடும் தன் காதலிக்கு பொருத்தமான பெயராக அமைந்துள்ளது. இன்னும் எத்துணை பாடல்கள் வரவிருப்பது என்பதை யான் அறியேன்.
காலங்கள் கடந்து நிற்கும் கவி குடுத்த மகா கவி மறைவு என்பது ஏது… இன்னும் பலநூறு ஆண்டு ஆயினும் மக்கள் மனம் நேசிக்கும் கவிகளில் பிறந்து கொண்டே இருப்பார் மகாகவி பாரதியார். “நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலாவுக்கு” என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Article By – RJ Hasini, Trichy

