30 Yrs of Bombay: மணிரத்னம் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மானின் இசையுடன் மத உணர்வுகளின் விபரீதத்தை சொல்லும் மகத்தான திரைப்படம் பம்பாய் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
பம்பாய்
மனிதர்களைச் சுமந்து செல்லும் படகுகள் மட்டுமே காட்டாம மனித மனங்கள் சுமந்து செல்லுற காதல்,பாசம்,மதம்,க்ரோதம்,கோவம் னு எல்லா உணர்வுகளையும் சொன்ன படம்.நெல்லை மண்ணுல எடுக்க பட்டாலே மண்ண பத்தி பேசுற,வீரத்தை பேசுற,குடும்ப உறவ பத்தி பேசுற கிராமத்து படங்களா எடுக்க பட்டத்துக்கு மத்தியில கிளாஸ் ஆனா ஒரு காதல் கதையை சொன்ன படமா இந்த படம் அமைந்தது…மனங்கள் காதல் கொள்ள மட்டுமில்லாம மனிதம் நிலையா இருக்கவும் மதம் தேவையில்லையுனு சொன்ன படம் தான் பம்பாய்.
எல்லா காதல் கதைக்கான தொடக்கமும் ஒரு நொடில தான் ஆரம்பிக்கும்.அந்த மாதுரி தான் சேகருக்கு ஷைலா பானு மேல வந்த காதலும்,பாலத்துக்கு மேல ஓடுற ரயில் சத்தம்,மாங்குடி ஆத்தங்கரை ,அந்த தென்றல் ஆத்து நீரை தொட்டு ஷைலா முகத்த தழுவுன அந்த நொடி, மெல்ல, இசை புயலோட மெல்லிசையும் இணைஞ்சு சேகர் மனசுல மட்டுமில்லாம நம்ம மனசுளையும் காதல விதைச்சிட்டு போச்சு. கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லைனு அவங்க பாட சேதி அறியாமலே சிறு பேதையா நம்ம மாறிட்டோம். இரண்டு வெவ்வேறு வழித்தடங்கள பாயுர நதியா இரண்டு பேரோட மதங்கள் இருந்தாலும் அந்த நதிகள் ஒண்ணா இனஞ்சாது காதல்ங்குற கடல்ல தான்.

என்னைக்குமே கடலுக்கு அதுல கலக்குற நதிகளோட பிறப்பிடமோ ,வழிதடமோ,வரலாறோ தேவையில்லை.அங்க வந்துட்ட எல்லாமே சமம் தான்.அது அந்த இரண்டு மனங்களுக்கு புரிய நதி ஓரத்துல ஆரம்பிச்ச கதை கடலோரத்துல அர்த்தம் பெற்ருச்சு. அந்த கடற்கரைதான் ‘பம்பாய்’, இன்றைய மும்பை. மதத்தைத் தாண்டி காதலைச் சொல்லிய படம் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’.இன்று அதற்கு வயது 30.
படம் வந்து 30 வருடங்கள் கடந்துவிட்டதைக் கூட நம்ப முடியாத அளவிற்கு இன்றும் பலரின் கண்களுக்குள்ளும்,காதுகளுக்குள்ளும் ஒ(ளி)லித்துக்கொண்டே இருக்கு. அதுக்கு இசையும்,காட்சிகளும். காரணம்…முதலில் மணிரத்னம்,இரண்டாவது ஏ.ஆர்.ரஹ்மான்… மூன்றாவது ராஜீவ் மேனன்.மணிரத்னத்தின் அக்மார்க் அழகியல்கள் அத்தனையும் இந்தப்படத்திலும் உண்டு.மனிதருக்கு கடல் மீது என்னதான் காதலோ? அவருடைய படங்களில் முடிந்தவரை கடல் இருக்கும்.கூடவே காதலும் இருக்கும்.இந்தப் படத்தில் அரசியலும் இருக்கும்.
‘நா உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துருவேன்.நீ எனக்காக வருவியா?’சேகராகவே வாழ்ந்திருந்த அரவிந்த்சாமி,ஷைலா பானுவான மனிஷா கொய்ராலாவிடம் கேட்கும்போது,பின்னணியில் அந்த வார்த்தைகளுக்கு வலு சேர்த்திருக்கும்,ஏ.ஆர்.ரஹ்மானின் பியானோவின் ரீங்காரமும்,உயிரை உருக்கும் புல்லாங்குழலின் இசையும். கண்ணுக்குள் தொடங்கி உயிருக்குள் புகுந்து,அரபிக்கடலின் ஆர்ப்பரிப்பு ரஹ்மானின் இசை.நெற்றிமுடி மெலிதாய்ப் பறப்பதில் இருந்து, ஷைலாபானுவின் பேசும் கண்கள்,சேகரின் நெற்றி மரு,நாசரின் கோபக் கொந்தளிப்பு மட்டுமில்லாம மகனை தேடி வரும் பாசம்,கிட்டியின் ஒற்றை வரி மனமாற்ற வசனம்,ராஜீவ் மேனனின் கேமரா.இயற்கையில் கொட்டிக் கிடக்கும் அழகை படமாக்கியதுடன்,அதற்கு எதிராக செயற்கைத்தனமாய் மனிதர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மதச்சண்டைக் கலவரங்கள்,அதனால் இழக்கப்பட்டவற்றையும் அப்படியே கண் முன்னே நிறுத்தியிருக்கும்.

அரசியல் களமும்,அன்புக்களமும் சேர்ந்தது பம்பாயின் கதை.1992-93களில் மும்பையைச் சூறையாடிய மதவேறுபாடுகளின் உண்மைக்கதையிலிருந்து பிறந்தது பம்பாயின் கற்பனை.சமூகத்தில் கிளைவிட்டிருந்த மதம் சார்ந்த அரசியலையும் பேசியதால்,படம் வெளியானபோதே குழுவிற்கு ஏராளமான எதிர்ப்புகள்.இயக்குனர் மணிரத்னத்தின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளெல்லாம் வீசப்படும் அளவிற்கு, மதம் ரத்தத்தில் ஊறிப்போய்கிடந்தது.மதப்பிரிவுகளைக் கடந்து மனங்கள் ஒன்றிணைவதுதான் காதல். அது கடலோடு கடல் கலக்கும் ஒற்றுமையின் நேசம். வருடத்திற்கு முன்பு வெளியான மணிரத்னத்தின் பம்பாய் சொல்லிச் சென்றது ஓர் அழுத்தமான உண்மை;‘காதல் மனம் சார்ந்தது…மதம் சார்ந்ததல்ல’என்பதே அது!
கடலில் கலந்த பிறகு நதிகளின் அடையாளம் மறைந்து விடும்..காதலில் மனங்கள் இணைந்த பிறகு மதங்களின் அடையாளம் மறந்து விடும்,மறைந்து விடும்.அதை நமக்கு உணர்த்திய படம் தான் பம்பாய்.அதிர்ஷ்டவசமாக படத்தில் அவர்கள் காதலில் வெற்றி பெற்று விட்டார்கள்.. படத்தில் மட்டுமே…இது போன்ற காதல் ஏதோ ஒரு இடத்துல வெற்றி பெற்றாலும் இன்றுவரை காதலுக்கு சரியான கெளரவம் கிடைக்கல பலர் கௌரவத்துனால காதல் புதைக்க பட்டு தான் இருக்கு.