கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய திரை பிரபலங்கள் பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்தெந்த திரைப் பிரபலங்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
1. ராஜமௌலி
பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் ராஜமௌலி. இவர் சில நாட்களாக மெலிசான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதன் பின் இவரது உடலில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இவர் மட்டுமன்றி இவரது வீட்டில் உள்ள குடும்பத்தினரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
இவரது ட்விட்டர் பதிவில் தங்களுக்கு எந்த அறிகுறியும் தற்போதுவரை தெரியவில்லை எனவும், சீக்கிரம் குணம் அடைவதற்கு விரும்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். இவரது ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
My family members and I developed a slight fever few days ago. It subsided by itself but we got tested nevertheless. The result has shown a mild COVID positive today. We have home quarantined as prescribed by the doctors.
— rajamouli ss (@ssrajamouli) July 29, 2020
2. அமிதாப் பச்சன் குடும்பம்.
பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் அவர்களது உடலில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமிதாப் பச்சனின் குடும்பத்தில் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி அராதயா என அனைவருக்குமே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
Earlier today both my father and I tested positive for COVID 19. Both of us having mild symptoms have been admitted to hospital. We have informed all the required authorities and our family and staff are all being tested. I request all to stay calm and not panic. Thank you. 🙏🏽
— Abhishek Bachchan (@juniorbachchan) July 11, 2020
Aishwarya and Aaradhya have also tested COVID-19 positive. They will be self quarantining at home. The BMC has been updated of their situation and are doing the needful.The rest of the family including my Mother have tested negative. Thank you all for your wishes and prayers 🙏🏽
— Abhishek Bachchan (@juniorbachchan) July 12, 2020
தற்போது அமிதாப் பச்சன் ஐஸ்வர்யா ராய் மற்றும் அராதயா ஆகியோர் இந்த வைரஸில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். அபிஷேக் பச்சன் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இவர், தான் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Thank you all for your continued prayers and good wishes. Indebted forever. 🙏🏽
— Abhishek Bachchan (@juniorbachchan) July 27, 2020
Aishwarya and Aaradhya have thankfully tested negative and have been discharged from the hospital. They will now be at home. My father and I remain in hospital under the care of the medical staff.
I, Unfortunately due to some comorbidities remain Covid-19 positive and remain in hospital. Again, thank you all for your continued wishes and prayers for my family. Very humbled and indebted. 🙏🏽
— Abhishek Bachchan (@juniorbachchan) August 2, 2020
I’ll beat this and come back healthier! Promise. 💪🏽
3. ஐஸ்வர்யா அர்ஜுன்
ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தான் கொரோனாவால் பாதிக்கப் பட்டது தெரிந்தவுடன் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
தற்போது ஐஸ்வர்யா அர்ஜுன் இந்த வைரஸில் இருந்து பூரணமாக குணம் அடைந்துள்ளார். தனக்கு கொரோனா வைரஸ் உறுதியானவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்ட பதிவை கீழே காணுங்கள்.

4. விஷால்
புரட்சித்தளபதி விஷால், தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து தற்போது குணம் ஆகிவிட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இவர் எப்படி அதிலிருந்து மீண்டார் என்பதை ரசிகர்களுக்கு கூறவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோவை கீழே காணுங்கள்.
5. வாஜீத் கான்
பிரபல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளரான வாஜித் கான் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சமீபத்தில் இறந்தார். 42 வயதான வாஜித் கான் தனது சகோதரர் சாஜித் கான் உடன் இணைந்து பல வெற்றிப் பாடல்களை உருவாக்கியுள்ளார்.
இவரது மறைவிற்கு அடுத்த நாளே இவரது தாயாருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது இழப்பு அவரது குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

6. எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தானே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன்னை மருத்துவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள கேட்டுக் கொண்டதாகவும், தானே முன்வந்து மருத்துவமனையில் அனுமதி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். S.P.B வெளியிட்ட வீடியோவை கீழே காணுங்கள்.
இத்தனை பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப சூரியன் FM சார்பில் வேண்டிக் கொள்கிறோம்.