Specials Stories

Flight Crash: விமானங்களில் இருக்கும் ஆபத்தும் , அதை கையாளும் முறையும் !

flight crash
flight crash

Flight Crash: மனிதனின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று வானில் பறப்பது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, தொழில்நுட்ப வளர்ச்சியால் விமானங்கள் வெகு விரைவாக உலகின் முக்கியமான போக்குவரத்து வழிமுறையாக மாறின. இன்று, வெறும் சில மணி நேரங்களில் நாடுகளைக் கடந்துவிடும் சக்தி விமானங்களுக்கு உண்டு.

வான்வழி பயணம் எந்த அளவுக்கு வேகமாக உலகை இணைக்கிறதோ , அதே அளவுக்கு இந்த வேகமும் உயரமும் சில அபாயங்களையும் கொண்டுவருகிறது. தொழில்நுட்ப கோளாறுகள், வானிலை மாற்றங்கள், மற்றும் மனித தவறுகள் ஆகியவை விமானப் பயணங்களில் சாத்தியமான ஆபத்துகளாக இருக்கக்கூடும்.

விமானங்கள் வானில் பறக்கும் பொழுது இது போன்ற அவசர நிலை அல்லது அபாயங்கள் ஏற்பட்டால் , தரையில் உள்ள விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு (ATC) உடனடியாக தகவல் தெரிவிக்கப்படுத்துவதற்காக, விமானத்துறையில் சில குறியீடுகள் பின்பற்றப்படுகின்றன.

இந்த குறியீடுகள் பயணிகளுக்கு பதற்றம் ஏற்படாத வகையில் விமான ஊழியர்கள் மற்றும் ATC மட்டும் புரிந்து கொள்ளும் விதமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

அவசர நிலை நேரங்களில் விமான ஓட்டுநர்கள் (Pilot) radar மூலம் “Squawk Codes” எனப்படும் நான்கு இலக்க எண்களை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க பயன்படுத்துவார்கள்.

அவற்றில்
7500 – சிகப்பு குறியீடு – விமானத்தில் சட்டவிரோதமான செயல்கள் நடந்தாலோ அல்லது விமானம் கடத்தப்பட்டால், தகவல் தெரிவிக்க பயன்படுத்தப்படும் ரகசிய குறியீடு.

7600 – ஆரஞ்சு குறியீடு -Radio Communication Failure, விமானம் தரையிலுள்ள ATC-யுடன் தொடர்பு இழந்துவிட்டால் பயன்படுத்தப்படும்.

7700 – மஞ்சள் குறியீடு மருத்துவ, தொழில்நுட்ப கோளாறு, தீ விபத்து போன்ற அவசர நிலைக்கு பயன்படுத்தப்படும்.

ரேடியோ மூலம் சில வார்த்தைகள் குறியீடாக சொல்லப்படும், அதில் Mayday என்ற வார்த்தை விமானத்தில் மிக மோசமான நிலை இருந்து , உயிர்க்கு அபாயம் இருக்கும் பட்ச்சத்தில் தெரிவிக்கப்படும் வார்த்தை குறியீடு தெளிவாக புரிய வேண்டும் என்பதிற்காக “Mayday, Mayday, Mayday” என்று மூன்று முறை அழைக்கப்படும்.

அடுத்து Pan-Pan என்ற வார்த்தை விமானத்தில் அவசர நிலை இருக்கும் ஆனால் உயிர் அபாயம் இல்லை என்றால் பயன்படுத்தபடும். இதுவும் புரிதலுக்காக “Pan-Pan, Pan-Pan, Pan-Pan” என மூன்று முறை சொல்லப்படும்.

Article by – சதீஸ்குமார் மனோகரன்

About the author

Sakthi Harinath