வாத்தி முதல் குபேரா: தனுஷின் 100 கோடி படங்கள்.. நடிகர் தனுஷ் நடித்து திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் மக்கள் பேராதரவில் வெற்றி பெற்று 100 கோடிகள் வசூல் படைத்த திரைப்படங்களின் லிஸ்ட் மற்றும் தகவல்கள் இங்கு உள்ளது. இதில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் முதல் இவரின் லேட்டஸ்ட் ப்ளாக்பஸ்டர் குபேரா திரைப்படம் வரை பல படங்கள் இந்த பட்டியலில் உள்ளது. முழு லிஸ்ட் இதோ.
திருச்சிற்றம்பலம்
யாரடி நீ மோகினி என்னும் வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான தனுஷ் & இயக்குனர் மித்ரன் ஜவாஹர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம், திருச்சிற்றம்பலம். இப்படத்தில் பாரதிராஜா, நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் என பல முன்னணி தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு மிக பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படம் நடிகர் தனுஷ் திரைப்பயணத்தில் 100 கோடி வசூலித்த முதல் படமாகும்.

வாத்தி
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம். இப்படம் தமிழ் & தெலுங்கு என இரு மொழியில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சனம் ரீதியில் மிக பெரிய சாதனை படைத்துள்ளது.

ராயன்
நடிகர் தனுஷ் தானே நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி உருவாக்கிய அதிரடி திரைப்படம். இப்படத்தில் சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, துஷாரா என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் சினிமாவில் 100 கோடிகள் வசூல் கடந்து மிக வெற்றி பட வரிசையில் இடம்பெற்று சாதனை படைத்திருக்கிறது.

குபேரா
குபேரா – தமிழ் & தெலுங்கு திரைப்படமாக உருவாகி இரு மொழி படமாக திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள திரைப்படம். இப்படத்தில் தனுஷ், ரஷ்மிகா & நாகர்ஜுனா ஆகிய முன்னணி நட்சத்திர பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக இப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு இந்த ஆண்டு 100 கோடிகளுக்கு மேல் வசூல் படைத்தது வெற்றி பெற்றுள்ளது.
