Cinema News Specials Stories

நான்கு வருட கொண்டாட்டத்தில் தில்லுக்கு துட்டு!!!

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வெளிவந்த காமெடி திகில் திரைப்படம் தில்லுக்கு துட்டு. இப்படம் வெளியாகி இன்றுடன் (ஜூலை 7)நான்கு வருடங்கள் நிறைவடைகிறது. #4YearsofDhillukuDhuddu என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பொதுவாக தமிழில் நாம் பார்க்கும் பேய் படங்கள் எல்லாம் பார்க்கும் ரசிகர்களை பயமுறுத்தும் நோக்கத்திலும், திகிலூட்டும் நோக்கத்திலும் தான் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் தில்லுக்கு துட்டு திரைப்படம் பேயை வைத்து கலாய்த்து காமெடி செய்யும் வகையில் அமைந்திருக்கும். 

சந்தானம், கருணாஸ், அஞ்சல் சிங், மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்துள்ள இப்படத்தில் கலகலப்புக்கும் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது. வழக்கம்போல சந்தானம் தனது மரணகலாய் கவுண்டர்களை இப்படத்திலும் சரமாரியாக உபயோகித்து இருப்பார். 

பேய்களை கலாய்த்து கலங்கவைக்கும் கவுண்டர்களை சந்தானம் இப்படத்தில் உபயோகித்து இருப்பார். இப்படத்தின் காமெடிகள் பார்ப்பவர்கள் மனதில் ஆழமாக பதியும்படி அமைந்திருக்கும்.

தமனின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கும். இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 2019- ல் வெளியிடப்பட்டது. நல்ல காமெடியை எதிர்ப்பார்த்து படம் பார்ப்பவர்களை திருப்தி அடைய செய்யும்படி அமைந்த தில்லுக்குதுட்டு ஒரு நல்ல திகில் காமெடி படமாக இருந்தது.

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.