நீங்கள் படிக்கும் இந்த கதை உங்கள் எண்ணங்களை மெருகேற்றலாம். ஏனென்றால் ஒரு அலெக்சாண்டர் மக்களை ஆளப் பிறந்தவர், மற்றொரு அலெக்சாண்டர் Telephone போன்ற கருவிகளைப் படைக்கப் பிறந்தவர்.
இந்த அலெக்சாண்டர் யதார்த்தமான படைப்புகளால் திரைத்துறையின் மற்றொரு பிம்பத்தை நமக்கு விளக்கியவர். மகேந்திர பல்லவனுடைய கலைகள் மீது ஆர்வம் கொண்டு தன் பெயரை மகேந்திரன் என மாற்றிக்கொண்டது மட்டுமின்றி இயக்குனர்களின் சிகரம் பாலு மகேந்திராவிற்கு அடுத்து சிறந்த படைப்பாளியாக இருந்தார்.

“அன்றே கணித்தார்”
இவர் முதன்முதலில் எழுதிய திரைக்கதை பொன்னியின் செல்வன். ஆம், இளம் வயதில் மதிப்பிற்குரிய MGR அவர்கள் முன் மேடையில் பேச அழைத்த மாணவர்களில் மகேந்திரனும் ஒருவர் “நிஜ வாழ்க்கையில் காதலித்து Duet பாடுவது கடினம். ஆனால் MGR அவர்கள் படத்தில் மூன்று Duet பாடினது சிறப்பானது” என்ற வசீகர பேச்சால் MGR-ன் கவனத்தை ஈர்த்தார். 3 நிமிட பேச்சு 45 நிமிடமாக மாறியது, அதோடு இவரது வாழ்க்கையும் மாறியது.
“சினிமாவுடன் கட்டாய கல்யாணம்”
MGR அவர்கள் அவர் வீட்டிற்கே அழைத்து கல்கியின் பொன்னியின் செல்வனைக் கதையாக எழுதச் சொன்னதுதான் சினிமாவில் இவரது முதல் படி. மூன்று எழுத்து மனிதரால் மாறிய இவர் வாழ்க்கையின் முதல் படைப்பு நாம் மூவர். எழுத்து, இயக்கம்,வசன கர்த்தா, நடிப்பு, ஆசிரியர் என பல அவதாரம் எடுத்த மகேந்திரன் கூடவே அவரது ஊருக்கும் படையெடுத்தார்.

பல நேரங்களில் தமிழ் சினிமா பிடிக்காமல் விட்டுப் போய்விடலாம் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. பிடிக்காமலே இவ்வளவு நல்ல படைப்புகள் என்றால், இவருக்குத் தமிழ் சினிமா பிடித்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் அதிசயம் நடந்திருக்குமோ!
“Commercial வளைக்குள் சிக்காத Common Man”
படங்களில் எதார்த்தங்களை நுழைத்தார் duet-களை வெறுத்தார், மற்ற காதல் படங்களில் மரத்தைச் சுற்றி duet பாடினபோது Johny படத்தில் தொடாமல் நடிக்கும் Romantic Hero-வாக ரஜினி-ஐ மாற்றினார். பாசமலர் படத்திற்கு அடுத்ததாக ஒரு சிறந்த அண்ணன் தங்கை பாசத்தைப் புதுமையான வடிவத்தில் காட்டியது முள்ளும் மலரும் திரைப்படம். ‘கெட்ட பய Sir இந்த காளி’ என்ற வசனத்தால் அனைத்து நல்ல உள்ளங்களையும் சம்பாதித்தவர்.
இப்படத்தின் கதாநாயகனான ரஜினிகாந்த் மட்டுமில்லாமல் இயக்குனரான இவரையும் வெற்றி வாகை சூடவைத்தது. இவரது படைப்புகள் சிற்பம் என்றால் இவர் எழுதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம் திரைப்படம் சிற்பத்தின் கண்கள் ஆகும்.
இன்றைக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் படங்களில் வில்லன் தரப்பில் ஒரு கதை இருப்பதை அப்போதே உதிரிப்பூக்கள் படத்தில் காட்டியிருக்கிறார். Commercial காட்சிகளை Cut செய்து இவருக்கென்றே Trend set செய்தவர்.

இன்றைக்கு Cinema Reviewers அதிகம். ஆனால் அன்றைக்கு இயக்குனர் மகேந்திரன் எழுதும் சினிமா Reviews தான் அதிகம் படிக்கப்பட்டது. இவர் பத்திரிகையில் எழுதின Postmortem மக்களிடையே சினிமா ஆர்வத்தை தட்டி எழுப்பியது.
தெறி படத்தில் வில்லனாகத் தெறிக்கவிட்டார். நல்ல அப்பாவாகத் தெரிவிக்கப்பட்டார். பல திறமைகள் கொண்ட பன்முக இயக்குனர் மகேந்திரன் அவர்களை சினிமா வாழும் வரையிலும் வாழ்த்துவோம்.