இந்த Article படிக்கிற நீங்க Men-ஆ Women- ஆன்னு எனக்கு தெரியாது, Women-ஆ இருந்தா ஒரு Glance Fast-ஆ read பண்ணிட்டு Article-ஓட Last Para-க்கு போய்டுங்க.. But Men-ஆ இருந்தா உங்களை சுத்தி பாருங்களேன், யாராவது ஒரு Women கண்டிப்பா இருப்பாங்க…பல பொருப்புகளோட, கனவு களோட….. உங்களால Witness பன்ன முடியுதா?இதை பார்த்து நீங்க சந்தோஷப்படனும்,பெருமை படனும்.
இதென்ன Men-ன்னும் தான் Hard Work பன்றாங்க இதுல என்ன இருக்குனு கேக்குறீங்களா? Yes இப்போ இதெல்லாம் ரொம்ப Normal ஆகிடுச்சுல.But generations before பெண் குழந்தைகள் பிறந்தாலே பாக்க கூட போகாம இருப்பாங்க and அதை ஒரு சோக விஷயமா consider பண்ணதையும் தாண்டி பெண் பிள்ளைகள் பிறக்கிறதுக்கு குழந்தையே வேணாம்-ன்னு பல கொடூரமான சடங்குகளையும் செஞ்சாங்க…இன்னுமும் கூட போதும்பொண்ணு-ன்னு பேரோட இருக்கிற நிறைய பெண்களை நம்மளால பாக்க முடியும்.
இதெல்லாத்துக்குமேலயும் ஒரு பொண்ணு school போனா அங்கேயும் கல்விக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுச்சு.இதுக்கு அப்புறமும் ஒரு பொண்ணு படிக்கிறதே சாதனை but அது நடக்குறதுக்கு முன்னாடியே நம்ம ஊர்ல குழந்தை திருமணம் பண்ணிடுவாங்க.நான் சொல்றது நம்புற மாதிரி தோனலனா இப்போவும் உங்க அம்மா….. அவங்களோட அம்மா கதையெல்லாம் கேட்டுப்பாருங்க தெளிவா புரியும். பெண்களோட வாழ்க்கை அவங்க ஆசை பட்டாலும் படலானாலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.Books-அ சுமக்க வேண்டிய வயசுல குழந்தைகளை வளர்த்த கதைகளை இன்னுமும் கிராமங்கள்ல நம்ம கேக்கலாம்.

இப்போ தான் எல்லாமே மாறிடுச்சே அப்டினு நம்ம பேச்சுக்கு மட்டும் சொல்லிக்கலாம் ஆனா வெளில தெரியாம இந்த ஏற்ற தாழ்வுகள் இருக்கத்தான் செய்யுது. இதை எப்படியாவுது மாத்தி அமைக்கணும்னு initiate பண்ண பட்டது தான் National Girl Child Day. Gender inequality,Female Foeticide,Access to education,Child marriage Prevention,Health and nutrition nu பெண் குழந்தைகளோட Basic rights,Empowerment-ன்னு எல்லாமே பாலின பாகுபாடு இல்லாம கிடைக்க opportunity-ய ஏற்படுத்தி கொடுக்கிற விதமா Every january 24,from 2008- லேர்ந்து கொண்டாடப்படுது NATIONAL GIRL CHILD DAY. இதுக்கு கீழ Government of India.. Beti Bachao Beti Padhao,Sukanya Samriddhi ,POSHAN Abhiyaan,NSIGSE,Mission Vatsalya,Udaan,Promotion of Menstrual Hygiene,Adolescent girls- னு பல Schemes introduce பண்ணினாங்க.
இப்போவுமே இது ஒரு Patriarchal soceity-ஆ தானே இருக்கு.Comparatively இந்த Generation Better-னு நெனச்சு முடிகிறதுக்குள்ள haryana-ல பத்து பொண்ணுங்களுக்கு அப்புறம் பதினொன்னாவதா ஒரு ஆண் குழந்தைன்னு பாராட்டு news viral ஆச்சு. Yes Still ரெண்டு பொண்ணுங்க இருக்க பல வீடுகள்ல என்னதான் அவுங்க நல்லா படிச்சு பெரிய job-ல இருந்தாலும் கூட வீட்ல பையன் இல்லனு குறை பேசுறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க. இந்த way of thinking மாற எவ்ளோ years ஆகும்னு தெரில but I Think நான் ஓரளவுக்கு பெண் குழந்தைகள் தாண்டி வந்த way-அ பத்தி 5 to 10 % understandable-ஆ எழுதிர்க்கேனு நினைக்கிறேன்….Anyways நான் சொல்ல வந்தது இதுதான்.
And Here Comes My pretty Women-கள்,as a girls girl-ஆ ,remember this என்னிக்குமே பெண்கள் அப்டிங்குற word-க்கு பொருளா பெருமைய நீங்க பாக்கணும்.. நம்மளால எல்லாமே முடியும்னு நம்புங்க even உங்கள சுத்தி எத்தனை Barriers இருந்தாலும். எப்போ எல்லா காலங்களையும் பெண் குழந்தைகள் கொண்டாட படறாங்களோ ,அந்த காலம் வரைக்கும் நாம jan 24 National Girl Child Day கொண்டாடிட்டே இருப்போம். எல்லா Girl chidren-க்கும் சூர்யன் FM-இன் National Girl Child Day Wishes.
Article by – RJ Monika

