நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டாக்டர் . இப்படத்தின் பிரத்தியேக படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நெக்ஸ்ட் – டிரெண்டாகும் ஹாஷ்டேக்
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தை கே.ஜே.ஆர் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனின் புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது, அவர் இப்படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது போல தெரிகிறது. இப்புகைப்படங்களை #Doctor என்ற Tag மூலம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு முன் வெளியான இப்படத்தின் ஸ்டில்களும் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டர் யோகி பாபு
தளபதி விஜய்யின் பிகில் மற்றும் கதிரின் ஜடா படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்து கலக்கிய காமெடி கிங் யோகி பாபு, சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் கிரிக்கெட்டராக நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனின் புது ஜோடி
இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணி என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும். டாக்டர் படத்திலும் இக்கூட்டணி இணைந்துள்ளது இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.
இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்கள்.