Eye Dhristi Proverb Decoding in Tamil – ஷிருஷ்ட்டிக்கும் போதே திருஷ்டி பட்டதோ…
நம் மனித வாழ்க்கையில் பிறந்த நாள் முதல் கண் திருஷ்டி என்பது நம்மோடு தொடர ஆரம்ப்த்து விட்டது. ஆம் நாம் குழந்தையாய் இருக்கும் போதே கன்னத்தில் நம் அம்மா மை இட்டு அழகு பார்ப்பார்கள். நம் குழந்தையை யாரும் கண் வைத்திட கூடாதுன்னு. அதிலும் கொஞ்சம் அதிகமாய் சென்று உள்ளங்காலில் எல்லாம் பொட்டு வைப்பார்கள். அது ஒரு புறம் இருக்கட்டும்.
கண் திருஷ்டி என்பது உண்மையிலயே மனிதர்களை பாதிக்கிறதா என பார்த்தால், அல்லது சந்தேகத்துடன் யோசித்தால்… எப்பா, அன்னைக்கே பெரியவங்க சொல்லிருக்காங்கப்பா அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்க…
‘கல்லடி பட்டாலும் கண்ணடி பட கூடாதுன்னு”
திருஷ்டி தோஷத்தில் இருந்து நம்மை காத்து கொள்ள தான் பெரியவர்கள் இது போன்றா சம்பிரதாயங்களை அறிவுறுத்திருக்கிறார்கள். திருஷ்டி என்பது பார்வையின் மூலம் உண்டாகும் வீரியம் நிறைந்த ஒரு உணர்வு.
கடைகளில், அலுவலகங்களில், நிறுவனங்களில், வித்தியாசமான படங்கள், பொம்மைகள், வைத்திருப்பார்கள், அதன் மீது வாடிக்கையாளர் மற்றும் வருபவர்களின் பார்வையில் எதிர்மறை எண்ணங்களோடு பார்வை படும் போது வீரியம் குறையும் என்பது நம்பிக்கை.
அதனால் தான் அதுபோன்ற படங்களை மாட்டி வைக்கிறார்கள். மற்றும் இன்னும் சிலர் பூசணிக்காய் உடைப்பது, எலுமிச்சம் பழத்தை அறுத்து குங்குமம் தடவி வைப்பது, தேங்காய் சுற்றி உடைப்பது, ஆரத்தி சுற்றுவது, உப்புச் சுற்றி போடுவது, என திருஷ்டி தோஷத்தில் இருந்து நம்மை காப்பற்றி கொள்வதற்காகத்தான்.
இன்னும் நம் கிராமங்களில் ஒரு பழக்கம் இருக்கிறது. முக்கிய இடத்துக்கு புறப்பட்டு செல்லும் போது எதிரில் யார் வருகிறார்கள் என பார்க்கும் பழக்கம் உண்டு, எல்லாவற்றையும் நம்புகிறமோ இல்லையோ, மனதை எப்போதும் தன்னம்பிக்கையுடன் வைத்து கொண்டால் என்றும் எதிலும் ஜெயம் தான்.

