Specials Stories

கிரிக்கெட்டின் வரலாற்றை திறந்தது இந்தியா மகளிர் அணி

EYES MAY BE CLOSED BUT HISTORY OPENED
EYES MAY BE CLOSED BUT HISTORY OPENED

‘கண்கள் மூடி இருந்தாலும் கிரிக்கெட்டின் வரலாற்றை திறந்தது இந்தியா மகளிர் அணி’

கிரிக்கெட் உலகம் முழுவதும் நேசிக்க கூடிய ஒரு அற்புதமான விளையாட்டு, குறிப்பாக இந்தியாவில் கொஞ்சம் அதிகமாகவே கிரிக்கெட் கொண்டாட்டங்களை காணலாம், “Cricket is not just a word it’s an emotion” என்ற வாக்கியத்தை போல கிரிக்கெட்டிற்கு ஒரு கடவுள், ஒரு தல, ஒரு தளபதி, என்று கிரிக்கெட் இங்கு பல மனிதர்களுக்குள் ஒரு உணர்வாகவே மதிக்கப்படுகிறது.

கிரிக்கெட்டில் ஆண்கள் பிரிவில் ஒரு பக்கம் சாதனைகளை படைத்து வர… மறுபக்கம் பெண்கள் பிரிவில் 2025 ஆம் ஆண்டிற்க்கான பெண்கள் உலகக்கோப்பையை வென்று சாதனை படைக்க…எங்களாலும் முடியும் என இந்த ஆண்டு தொடங்கப்பட்ட பார்வையற்றோருக்கான T20 உலகக்கோப்பையை வென்று நம் நாட்டின் அக்கினி சிறகுகள் சாதைப்படைத்துள்ளனர்

ஒலி எழுப்பும் ஒரு வித பந்தினால் விளையாடக்கூடிய இந்த பார்வையற்றோருக்கான கிரிக்கெட்டிற்கும் சராசரி மக்கள் விளையாடும் கிரிக்கெட்டிற்கும் பல வித்யாசம் உள்ளது, பந்துவீச்சாளர்கள் (Under Arm)என்னும் முறைப்படி பந்து வீசுவார்கள் வீசிய பந்து தங்களை எதிர்நோக்கி வரும்போது பந்திலிருந்து வரும் ஓசையை வைத்து பந்தை அடிப்பார் batter, ஓவ்வொரு முறை பந்து பௌண்டரி லைன்- னை கடக்கும்போது 6 run கொடுக்கப்படுகிறது, ஓடி எடுக்கும் ஓவ்வொரு ரன்னிற்கும் 2 ரன்கள்கொடுக்கப்படுகிறது, பொதுவாகவே பார்வையற்றோர் அணியை B1,B2,B3 என பிரிக்கிறார்கள் B1 – Fully Blind, B2- Partially Blind, B3- Half Blind, ஓவ்வொரு அணியிலும் சரிசமமாக B1,B2,B3 என்கிற பிரிவில் வீரர் வீராங்கனைகளை இடம் பெற செய்கிறார்கள்….

இந்தியா அணியை வெற்றி பாதைக்கு கொண்டுசென்ற அனைவரும் நடுத்தறவர்கம் மற்றும் விவசாய பின்னணியை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள், அனைவரும் ஏதோ சிறிய நகரங்களில் இருந்தே தங்களின் தந்தை மற்றும் Coach இன் வழிகாட்டுதலினாலே வருகிறார்கள்

ஆரம்பத்தில் உலகக்கோப்பை வெறும் கனவாக இருந்த இந்தியா அணிக்கு சரியான வழிகாட்டுதல் மற்றும் தன்னம்பிக்கை கொடுத்த Coach – ற்குharman மக்களிடம் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது

இந்தியா அணியில் விளையாடும் அனைவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருப்பதாகவும் அவர்களுக்கு கிடைக்கும் அழுகிய பழங்களில் அழுகிய பகுதிகளை நீக்கிவிட்டு மற்ற பகுதிகளை மட்டுமே அருந்திவிட்டு விளையாட செல்வதாகா அணியின் கேப்டன் Deepika T.C ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார் மேலும் இந்தியா பெண்கள் அணிக்காக விளையாடும் Harman Preeth Kaur மற்றும் smriti mandhana க்கு கிடைக்கும் ஆதரவு எங்கள் அணிக்கும் கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் என்னவும் தெரிவித்துள்ளார்….

சாதிப்பதற்கு மாற்றுத்திறன் என்றுமே தடையாக இருக்காது என்பதற்க்கு இவர்களே பெரிய எடுத்துக்காட்டும் பெரிய உத்வேகமும், பார்வையற்றோருக்கான T20 உலக கோப்பையை வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த அக்கினிசிறகுகளை வாழ்த்தி பெருமிதம் கொள்கிறது சூரியின் பண்பலை

Article By – ஹென்றி