வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் முதல் பத்து நிமிட Sneak Peek வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து இப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி இருக்கிறது. தற்போது வெளிவந்துள்ள sneak peek வீடியோ அந்த எதிர்பார்ப்பை மேலும் ஒரு படி ஏற்றி வைத்துள்ளது.
இப்படத்தில் ஹர்பஜன் சிங், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ், பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள விறுவிறுப்பான Sneak Peek படத்தின் கதை அம்சத்தை குறித்த பல சந்தேகங்களையும் ஆர்வத்தையும் எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகிய இருவரும் இப்படத்தை இணைந்து இயக்கியுள்ளனர். கிரிக்கெட் மைதானங்களில் பார்த்த ஹர்பஜன் சிங்கை வெள்ளித் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
வெளியாகியுள்ள Sneak Peek வீடியோவில் ஆக்சன் கிங் அர்ஜுனின் Mass-ஆன சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் டிரைலரையும், Sneak Peek-ஐயும் வைத்துப் பார்க்கும் போது இன்றைய சமுதாயத்தினருக்கு இப்படம் ஏதோ ஒரு கருத்து சொல்ல முயல்வது போல தெரிகிறது.
- திரு, திருமதி பெயரில் இருக்கும் ரகசியம்
- சுவாமி பெயரில் அர்ச்சனை செய்யலாமா? கூடாதா?
- Thalaivar 75: கொடிகட்டி பறக்கும் முடி சூடா மன்னன்!
- Jasprit Bumrah – சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த முதல் இந்தியர்!
- சகுனம் பார்ப்பது குணமா!
பிரண்ட்ஷிப் திரைப்படம் வெற்றி அடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். வெளியாகியுள்ள முதல் பத்து நிமிட Sneak Peek வீடியோவை கீழே காணுங்கள்.

