நம்ம ஒரு கனவை தேடி போறோம்னா ரொம்ப கடினமா நெருப்பு மழை பொழிஞ்சி, எரிமலை வெடிச்சி மேடு பள்ளம்னு எல்லாம் கடந்து வந்த ரொம்ப கடினமான பாதையா தான் இருக்கும். ஆனா இப்போ நான் சொல்ல போற இந்த குறிப்பிட்ட நபரோட வெற்றிப்பயணம் மட்டும் ரொம்ப ஜில்லுனு “சில்லுனு ஒரு காதல்”ல இருந்து ஆரம்பிச்சுது.
அப்படிப்பட்ட ஒரு பனிமலையை கடந்து வந்த கதைதான் இவரோட கதை… ரொம்ப யோசிக்காதீங்க நம்ம திரைப்பட தயாரிப்பாளர் திரு ஞானவேல் ராஜா அவர்கள் பத்திதாங்க சொல்லப் போறேன்.

பொதுவா நம்ம கனவை ஒரு கட்டத்துல சின்ன வயசுல நமக்கே தெரியாம நம்மள அறியாம ஒரு செயலா செஞ்சிருப்போம். இயற்கை அதுக்கான ஒரு வழியை ஏற்படுத்தி கொடுக்கும், இவருக்கும் அந்த வகையில ஏற்படுத்தி கொடுத்துச்சு-னு சொன்னா அது மிகை ஆகாது.
சின்ன வயசுலயே பள்ளிக்கூடம் cut அடிச்சிட்டு சினிமா பார்க்க அவரோட நண்பர்களோட போவாராம், சுத்தி இருக்குறவங்க என்ன சொன்னாலும் பெருசா பொருட்படுத்தாம அதையே அவரோட கனவா எடுத்துக்கிட்டு பல படங்கள் தயாரிக்கவும் செஞ்சிருக்காரு, அதை தாண்டி அவரோட தன்னம்பிக்கையாலும் கடின உழைப்பாலும் வாழ்க்கைல விளையாட்டா சொன்ன விஷயத்த வேத வாக்கா மத்திருக்காரு.
பள்ளிக்கூடம் படிக்கும்போது நான் படம் எடுப்பேன் நீ நடிக்கணும் அப்படினு இவரு விளையாட்டா கார்த்திட்ட சொல்லிருக்காரு. அது எந்த அளவுக்கு பிரதிபலிச்சிருக்குனா, அவரோட சிறந்த படைப்புகள்-ல ஒன்றான பருத்திவீரன் படத்துல கார்த்தி நடிச்சிருப்பாரு. (பருத்திவீரன் நடிகர் கார்த்தியோட முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது) தன்னோட படத்துல அவரோட நண்பரை அறிமுகம் பண்ணது ரொம்ப சுவாரசியமாவும், அந்த விளையாட்டுச் சொல் செயலா மாறினதும் ஆச்சிரியமா இருக்குல, அவர் தாங்க நம்ம ஞானவேல் ராஜா.
இவர் தயாரிச்ச பல படங்கள் வெற்றிநடை போட்டுருக்கு. 2007-ல பருத்திவீரன், 2010-ல சிங்கம் மற்றும் நான் மஹான் அல்ல போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்துச்சு.

இவரோட பல படைப்புகள் பல விருதுகள் வாங்கிருக்கு, வித்யாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அத படமாக்குறதுல இவரு வல்லுனர் தான், உதாரணத்துக்கு சூர்யா நடிச்ச மாசு என்கிற மாசிலாமணி, ஆர்யா நடிச்சி வெளிவந்த Teddy படங்கள எடுத்துக்கலாம். அவரோட தயாரிப்பு மூலமா பல திரைப்படங்கள் கொடுத்து நம்மளை மகிழ்விக்கவும் அவர் மகிழ்ச்சியா இருக்கவும் சூரியன் FM சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Add Comment