நீங்க இந்த வருஷம் எதை பத்தி பேசலனாலும் இந்த ஒரு விஷயத்த கண்டிப்பா பேசீர்ப்பீங்க ,Because யாருமே எதிர் பாத்திருக்க மாட்டோம் 2025 ஓட மெகா ட்விஸ்ட்-ஏ இதுதான்னு . கண்ண மூடி தொறக்கிறதுக்குள்ள எங்கயோ போயிடுச்சுனே சொல்லலாம்.
அதே சமயத்துல பெஸ்ட் இன்வெஸ்ட்மென்ட்-ஆவும் இதான் இருக்கு ஆனா இன்வெஸ்ட் பண்ண தான் கையில amount இல்ல.Actually பலருக்கு இப்டி ஆகும்ங்கிற ஐடியாவே இருந்துருக்காது,anyways title பாத்ததும் நான் இந்த article-ல எதை பத்தி share போறேன்னு guess பண்ணிருப்பீங்க…..
நான் போகிறேன் மேலே மேலேங்கிற மாறியும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும்ங்கிற அளவுக்கு நம்மள ஷாக் ஆக வெச்ச one and only கோல்டு ரேட் பத்தி தான். அதுவும் இப்போ கல்யாணங்கள்ல எங்களுக்கு நீங்க நகையே போடா வேணா நாங்களு போட மாட்டோம் even மொய் பணம் கூட வெக்காதீங்கனு சொல்ற rangeக்கு எல்லாமே மாறிடுச்சு. இதுக்கு ரொம்ப முக்கியமான காரணமா gold rate hike-அ சொல்லலாம். உலக அளவுல எல்லா தரப்பு மக்களாலயு விரும்பப்படற ஆபரணம் GOLD .இது மக்களோட தனிப்பட்ட Wealth-அ தாண்டி நாட்டோட economy- க்கும் contribute பண்ணுது. இன்னும் தமிழ்நாட்டுல பலரோட emotion-ஆ இருக்கிறதும் goldதான். அதுவும் இந்தியால கலாச்சார ரீதியா தங்கத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கறதுனால இதோட தேவையும் தொடர்ச்சியா அதிகரிக்கிது.
So வாங்க நம்ம இதோட ஆரம்பத்துலேர்ந்து வருவோம், அதாவுது ஜனவரி 1- 2025, உன்கிட்ட ஆரம்பம்-லா நல்லா தான் இருக்குனு சொல்ற மாறி, வழக்கமான ரேட் 57,200-ஆ இருந்துச்சு..அப்டியே Febraury-ல பாத்தோம்னா கொஞ்சோ ஏறி 61,960 ஆச்சு. சரி இனி கம்மியாகும்னு நெனச்சா அடுத்தடுத்து march-ல 63,520,april-ல 68,160,may-ல 70,200 ஆகிடுச்சு.. இதென்னடா-னு யோசிச்சி முடிக்றதுக்குள்ளயே june-ல 71,600,august-ல 73,200-அ நெருங்கிடுச்சு.இதுக்கு அப்பறம் continuous விலையேற்றம் தான். September-ல 77,640,October-ல 87,120- னு.
இனிதான் mini heart attack மாறி ஒரேயடியா November 1-90,480-ஆ ஆச்சு. இதுக்கு ஒரு end card-ஏ இல்லையானு யோசிக்கிற gap-ல,year end December-ல ஒரேயடியா 1,00,120-ஆ வரலாறு காணாத உச்சத்த பிடிச்சி,அதாவது ஒரே நாள்ல பவுனுக்கு 1,160-ஆ உயர்ந்துருக்கு. இந்தியா உள்பட, பல நாடுகலேர்ந்து அமெரிக்கால இறக்குமதி ஆக கூடிய பொருட்களுக்கு அதிகமான tax போட்டது ,எச்1பி விசா payment increase பண்ணது, பணவீக்கம், உலகளாவிய பொருளாதார மாற்றங்கள்,டாலர் மதிப்புல ஏற்ற தாழ்வுகள்- னு இது மாறி நெறைய காரணங்களால gold rate அதிரடியா அதிகமாகியிருக்கு.
அதுலயும் special-ஆ, December 15,2024-ல 57,120-னு comparison videos எல்லாம் பாக்குறப்போ நம்மளும் வாங்கிருக்கலாமோ-னு feel பண்ணவங்க பல பேரு. சொல்லனும்னா 2025 starting-ல gold வங்கினது best investment-ஆ பலருக்கு அமஞ்சிருக்கும். கிட்டத்தட்ட பாதிக்குப்பாதி savings ஆகிடுச்சுல. எந்த நியூஸ் பாத்தாலும் ஒரே headlines-ஆ 2025-ல் தங்கம் விலை கடந்து வந்த பாதை-னுதான் இருக்கு . நான் article ஆரமிச்சு முடிக்கிறப்போ இந்த rate-தான்… ஆனா நீங்க படிக்கிற இந்நேரம் எவ்ளோ ஆகிருக்கோ!
Article by – RJ Monika

