“எல்லாருக்கும் நல்லவனா இருக்க கடவுளால கூட முடியாது” அப்படின்னு தனி ஒருவன் படத்துல அரவிந்த் சாமி ஒரு டயலாக் சொல்லி இருப்பார், யோசிச்சு பார்த்தா அது உண்மைனு கூட தோணும், ஆனா இது பொய்யின்னு ஒருத்தர் நிரூபிச்சிருக்காரு… அவர்தான் சியான் விக்ரம்!
Yes, The Man With Zero Haters… தலைவர், உலகநாயகன், தல, தளபதி, இன்னும் வேறு சில நாயகர்களை கொண்டாடி தமிழ் சினிமா ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டாலும், ஒருவரும் இவரை வெறுத்ததில்லை.
சினிமா ஒரு விசித்திரமான தேவதை எப்போ யார எங்க தூக்கி வைக்கும், யார எங்க தூக்கி எறியும் என்று சொல்ல முடியாது.
ஆனா உறுதியா ஒன்னு சொல்லலாம் கடுமையான உழைப்போட விடாமுயற்சியோட போராடிட்டே இருக்கிறவங்கள என்னைக்கும் சினிமா கைவிட்டதில்ல. அதுக்கு உதாரணம் சியான் விக்ரம் தான். ஆரம்பத்துல ஸ்ரீதர், PC ஸ்ரீராம் போன்ற ஒளிப்பதிவாளார்களுடைய இயக்கத்தில் திரைப்படங்கள் நடிக்கிறார், பிளாப் ஆகுது, இசைஞானி இளையராஜா இசை கூட அவரை காப்பாத்தல.
அதுக்கு பிறகு அப்போதைக்கு ரொம்ப பிரபலமா இருந்த இயக்குனர் விக்ரமனுடைய இயக்கத்தில் AR ரஹ்மான் இசையில் புதிய மன்னர்கள் அப்படிங்கற படத்துல நடிக்கிறார். அதுவும் Failure தான். தொடர் தோல்விக்கு பின்னாடி 9 வருசம் கழிச்சு “சேது” அப்டின்னு ஒரு படம் அவருக்கு வெற்றியை தேடிக் கொண்டு வருது.
சினிமா தனக்கு தோல்விய மட்டுமே தருதுன்னு அவர் சினிமாவ விட்டு ஒருபோதும் விலக நினைக்கல. அரவிந்த்சாமி, அப்பாஸ், அஜித், பிரபுதேவான்னு பல ஹீரோக்களுக்கு பின்னணி குரல் கொடுத்துட்டு இருந்திருக்கார். டப்பிங் ஆர்டிஸ்ட்ட இப்போ வாய்ஸ் ஆக்டர்னு சொல்றாங்க, நிச்சயமா விக்ரம் அந்த காலத்திலேயே ஒரு நல்ல வாய்ஸ் ஆக்டரா இருந்திருக்கார்.
சேது திரைப்படம் தந்த வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியா தில், தூள், ஜெமினின்னு கமர்சியலா ஹிட் கொடுத்துட்டு வந்திருந்தாலும், அத மட்டுமே தன்னோட பயணமாக்காம காசி, பிதாமகன் அப்படின்னு தன் நடிப்புக்கு தீனி போடும் படங்களையும் நடிச்சிட்டு இருந்தாரு.
ஒவ்வொரு படத்திலும் தனக்கு எவ்வளவு சம்பளம் அப்படின்னு அவர் யோசிச்சுருப்பாரான்னு தெரியல. தனக்கு எவ்வளவு Challenging-அ அந்த கேரக்டர் இருக்குங்கறத நிச்சயம் யோசிச்சுருப்பார் விக்ரம். ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு படத்துக்கு ஒவ்வொரு கெட்டப்புன்னு வித்தியாசம் காமிச்சுட்டுருந்த சினிமா உலகத்துல ஒரே படத்துல பல விதமான கெட்டப்புகள் அதற்கு பலவிதமான உடல் கட்டமைப்புகள்னு செஞ்சு காட்டினார்.
அந்த வரிசையில் ஐ படத்த சொல்லாம இருக்க முடியாது. ஆரம்பத்துல ஆஜானுபாகுவான ஜிம் பாடிய காமிச்சிட்டு, அதன் பிறகு ஒரு மாடலா தன் உடம்ப FIT-ஆ காமிச்சுட்டு, அதன் பிறகு நோய்வாய்ப்பட்ட ஒரு கூன் விழுந்த உடல்வாகக் கொண்ட கதாபாத்திரத்துலயும் நடிச்சு அசத்திருப்பாரு. இது எல்லாத்துக்கும் அவர் எடுத்துக்கிட்ட காலம் வெறும் இரண்டு இரண்டு மாதங்கள் தான்.

ஒரு நாளைக்கு சராசரியா 300 கிராம் எடையை குறைச்சுருக்காரு விக்ரம். நிச்சயமா இதெல்லாம் அவர் அந்த படத்துல வாங்கின சம்பளத்துக்காகவா பண்ணியிருப்பாரு? சினிமா மேல அவருக்கு இருந்த தீரா காதல், ரசிகர்களுக்கு ஏதாவது புதுமையா காட்டணும்னு அப்படிங்குற அவருடைய வெறி தான் இந்த அளவுக்கு அவரைப் பார்த்து வியக்கவைக்குது.
இயக்குனர் மணிரத்னம், அவர்களுடைய பாம்பே திரைப்படத்தில் நடிகர் விக்ரம் தான் நாயகனா நடிக்க வேண்டியிருந்துச்சு. அது Miss ஆயிடுச்சு. ரொம்ப நாள் கழிச்சு ராவணன் படத்துல மணிரத்னத்துடன் கைகோர்த்தார் விக்ரம். ஒரே படத்துல ஒரு நடிகர் ஹீரோவாவும், வில்லனாவும் நடிச்சது வரலாற்றுலேயே அதுதான் முதல் முறையா இருந்திருக்கும். தமிழில் ராவணனாகவும் (நாயகனாக), அதே படத்தின் ஹிந்தி வெர்ஷனில் வில்லனாவும் நடிச்சிருந்தார்.

இரு மொழிகளிலும் இரு கதாபாத்திரங்களிலும் வெகு சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருந்திருப்பார் விக்ரம். அதேபோல இப்போ மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்துலயும் தன் அசுர நடிப்பை வெளிப்படுத்தியிருக்கார்.
தேசிய விருது, மாநில விருதுனு எத்தனையோ விருதுகள் வாங்கியிருந்தாலும் ரசிகர்களின் கைதட்டலும், சாலையில் மக்கள் அடையாளம் கண்டு தன் நடிப்பை பற்றி வாழ்த்துவதும் மன நிறைவை தருவதாக சொல்கிறார் சியான். அவர் நடித்த ஒரு சில படங்கள் நன்றாக போகாமல் இருக்கலாம், ஆனால் அவர் நடிப்பில் ஒரு போதும் குறை இருந்திருக்காது. அந்த நடிப்பை பார்க்கும் போது நமக்கு கிடைக்கும் பிரம்மிப்பும் பரவசமும் ஒரு போதும் குறையாது.

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு கிடையாது என்று சொல்வார்கள்… விக்ரமுக்கும் கிடையாது..! தமிழ் சினிமாவிற்கு, ஏன் இந்திய சினிமாவிற்கே பெருமையாக திகழும் சியானுக்கு சூரியன் FM-ன் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.