Cinema News Specials Stories

நாசர் எனும் தலை சிறந்த நடிகர்!

இவரை என்ன னு சொல்ல, இவர் சிறந்த நடிகர், Unique ஆன இயக்குனர், தயாரிப்பாளர், உயிர் தொடும் பல கதாப்பாத்திரங்களின் டப்பிங் கலைஞர், பாடகர் , அரசியல்வாதி.

இப்டி பல அடையாளங்கள் இவருக்கு இருக்கு. இவரோட எந்த ஒரு அடையாளம் பத்தி பேச நினச்சாலும், அதுல இவருக்கான தனி இடத்தை புடிச்சுருக்காரு. சின்ன வயசுல, இவர வில்லனா பார்த்தே பல பெண்கள் காதல்வயப்பட்டது உண்மைதான்.

நீங்க இத நம்பலான அவரோட Flashback Pictures-அ பாத்துட்டு வாங்க… இவரு Botany Student, அப்புறம் இந்திய விமானப்படைல கொஞ்ச காலம், அடுத்ததா கலைத்துறைல கால வச்சாரு. எப்படி MGR, சிவாஜினா நம்பியாரோ அதுபோல அவருக்கு நம்பியாருக்கு பின்னால நாசர் தான்.

அவரை மிஞ்ச இன்னும் யாரும் இல்ல , இனியும் யாரும் இருக்க வாய்ப்பு ரொம்ப கம்மி. சும்மாவா தென்னிந்திய நடிகர் சங்கம் இவர கலைச்செல்வன்னு பேரு வச்சு கொண்டாடுறாங்க. ஊரென்ன உலகமே கொண்டாட இவருக்கான தனியொரு பட்டாளமே இருக்கு. அதுல இந்த Suryan FM-ம் ஒன்னு.

Common ah எந்த ஒரு படம் பாத்தாலும் அதுல உள்ள Character நம்ம மனசுக்குள்ள போகணும். அப்டி இருந்தா அந்த நடிகர் அசத்திருக்காருனு அர்த்தம். ஆனா நாசர் Sir அந்த கதாபாத்திரத்தையும் தாண்டி, இந்த Character-அ இவரைவிட யாரும் நல்ல பண்ணமுடியாதுலனு யோசிக்க வைப்பாரு.

அதுனால தான் அவரு “நாசர் ”. “அன்றும் இன்றும் என்றும் உங்கள் நடிப்பினால் காதல்வயப்பட்டுள்ள அனைவருடைய சார்பாக Suryan FM உங்களை மனமாற வாழ்த்துகிறது.

Article By RJ Ramya

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.