நமக்கு தெரியாம நம்ப நண்பன் பிரியாணி சாப்பிடும்போது “என்ன கொடும சரவணன்”, இதுல ஆரம்பிச்சு லஞ்ச் டைம்ல “மணி பசிக்குது மணி” வரைக்கும் இவோரட மாடுலேஷன் தான் நியாபகம் வரும்.
இதுலயே தெரிஞ்சிருக்கும் நான் இப்போ யாரப்பத்தி சொல்லப் போறேனு, நம்ப இளைய திலகம் பிரபுவை தாங்க சொல்றேன். என்ன தான் இவரோட அப்பா நடிப்பின் ஜாம்பவானா இருந்தாலும் இவருக்கு நடிக்குறதுல அந்த அளவுக்கு விருப்பம் இல்லாம தான் இருந்திருக்கு. தன்னோட அப்பாவை வைத்து படம் இயக்கிய இயக்குனர்கள் போட்ட பாச சங்கிலியால திரை உலகில் கால்பதிச்ச இவரு நடிச்ச முதல் படம் பேரு சங்கிலி.

இந்த சங்கிலிய பிடிச்சு முன்னேற தொடங்கின இவரு இன்னிக்கு வரைக்கும் தன்னோட தனித்துவமான நடிப்பால நம்மள பிரமிக்க வைச்சிட்டு தான் இருக்காரு. வாத்தியார் புள்ள மக்கு, போலீஸ் புள்ள திருடன்னு பேசுற மக்கள் இவரு ஷூட்டிங் போற இடத்துலயும் என்ன தான் நீ நடிச்சாலும் உங்க அப்பா மாதிரி வராதுனு பல விமர்சனங்கள் வச்சாலும் அந்த விமர்சனத்தையே ஆசிர்வாதமா எடுத்துகிட்டதாகவும் சொல்லிருக்காரு.
விருப்பம் இல்லாம சினிமா இண்டஸ்ட்ரிக்கு வந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு தன்னோட நடிப்பு திறமையை மெருகேத்த தொடங்கிட்டாரு. இன்னிக்கு பல சாக்லேட் பாய்ஸ் இருந்தாலும் அவரு படங்கள் அதிகமா வந்த காலத்துல அவரு தான் சாக்லேட் பாய், இன்னிக்குமே அவரோட கன்னக்குழிகள்ல இருந்து மீளாத பெண்கள் அதிகம்னே சொல்லலாம்.

ஷூட்டிங் ஸ்பாட்ல மழைல நனஞ்சவங்கள விட இவரோட பாச மழைல நெனஞ்சவங்க தான் அதிகம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இவர் வீட்டுலருந்து வர சாப்பாடுக்கு தனி FAN BASE இருக்கு, எல்லாரும் சேர்ந்து சாப்பிடும்போது அடுத்தவங்களுக்கு என்ன பிடிக்கும்னும் என்ன விரும்பி சாப்பிடுவாங்கணும் பார்த்து பார்த்து பரிமாறுவார்னு கூட இருந்த நிறைய பேர் சொல்லிருக்காங்க.
சக கலைஞர்கள் கிட்ட இவ்ளோ பாசமா இருக்கும்போது தன்னோட வாழ்க்கையை சமமா பகிர்ந்துகிட்டவங்களுக்கு எவ்ளோ பாசத்தை கொடுப்பாருனு சொல்லி தெரியணும்னு அவசியம் இல்ல. எவ்ளோ படங்கள் ஒரே நேரத்துல நடிச்சிட்டு இருந்தாலும் வீட்டுக்கு குடுக்க வேண்டிய நேரத்தை சரியா ஒதுக்கி அவங்களையும் அவ்ளோ அன்பா பாத்துப்பாராம்.

இதே விஷயத்த அவரோட மகனான விக்ரம் பிரபுவும் FOLLOW பண்றாருனு விக்ரம் பிரபுவோட வேலை பார்த்தவங்க சொல்லிருக்காங்க. எவ்ளோ வேலை இருந்தாலும் அதையும் பண்ணிட்டு அவரோட வீட்டுக்கு தேவையான விஷயங்களையும் தானே ஒன்னு ஒண்ணா பாத்து பாத்து செய்வாராம். விக்ரம் பிரபுவும், பிரபுவும் பொன்னியின் செல்வன்ல நடிச்சது நமக்கு தெரியும்.
ஆனா நடிகர் திலகமும் இளைய திலகமும் ஒன்னா சேர்ந்து 15 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பண்ணிருக்காங்க. என்ன தான் அப்பா பையனா இருந்தாலும் வேலைனு வந்துட்டா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாராம் நடிகர் திலகம். நடிப்பு சக்கரவர்த்தியின் மகனாக இருந்தாலும் தனக்கென தனி ராஜ்யத்தை உருவாக்கி எத்தனையோ ஆண்டுகள் கடந்தும், இன்றும் இளமை மாறாமல் அனைவரது வீட்டிலும் சின்ன தம்பியாக வலம்வரும் இளைய திலகம் பிரபுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது சூரியன் FM.