ஒரு காலத்துல யாருடைய படம் வந்தாலும் ஒரே ஒரு பேர் மட்டும் எல்லா படத்திலும் Common ah இருக்கும் அதுதான் “இசைஞானி இளையராஜா” மியூசிக் டைரக்டர் டிபார்ட்மெண்ட்ல மாறவே மாறாது. அந்த காலம் போய் அதுக்கப்புறம் “ஏ ஆர் ரகுமான்”அவர்களுடைய காலம் வந்தது அதுக்கப்புறம் “யுவன் சங்கர் ராஜா” அவருடைய காலம் அதே போல இப்போதைக்கு இருக்கக்கூடிய சினிமாவ ஆட்சி பண்ணிட்டு இருக்கிறது “அனிருத் ரவிச்சந்தர்”னு சொன்னா நம்ப முடியுமா. தமிழ் சினிமால ஆரம்பிச்ச அவருடைய பயணம் ஹிந்தி, தெலுங்கு, கன்னடா, இப்படி பான் இந்தியா லெவலுக்கு அவருடைய பர்ஃபார்மன்ஸ் ஹெவியாவும் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியும் இருக்கு அதனால தான் அவரை நாம “ராக் ஸ்டார் அனிருத்”னு கூப்பிடுறோம்.
நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு விஷயம் அனிருத் தன்னோட இளமைப் பருவத்திலேயே சினிமால காலடி எடுத்து வச்சாரு, அதுவும் “தனுஷ்” அவர்களுடைய “3” படத்திலிருந்து அவருடைய சினிமா காலம் தொடங்கியது, இப்போ மூச்சு விடுறதுக்கு கூட நேரம் இல்லாம அடுத்தடுத்து ஏகப்பட்ட திரைப்படங்கள்ல அவரு மியூசிக் கம்போஸ் பண்றாரு. நிறைய புதுமையான எக்ஸ்பிரிமெண்ட் அவருடைய மியூசிக் கம்போசிஷன்ல சக்ஸஸ் ஆகி இருக்கு அவருடைய சக்ஸஸ் ஃபார்முலா புதுசா நிறைய விஷயங்களை ட்ரை பண்றதுதான்.
ஒரு மியூசிக் கேட்டு அந்த மியூசிக் கம்போஸ் பண்ணது யாரு அப்படின்னு நாம “இசைஞானி இளையராஜா” அவருடைய பீரியட்ல இருந்து நாம பார்த்துகிட்டே வர ஒரு விஷயம்தான் ஆனா இந்த ஜெனரேஷன்-ல மியூசிக் கேட்டவுடனே இது யாரோட மியூசிக் ன்னு கெஸ் பண்றது கடினமாக இருக்கும் ஆனா அதுலயும் நம்ம “ராக் ஸ்டார் அனிருத்தின்” மியூசிக் கேட்கும் போது கண்டிப்பா நம்மளால இது இவர்தான் பண்ணி இருக்காரு னு அடிச்சு சொல்ல முடியும்.
“DnA” அப்படின்னு செல்லமா அழைக்கக்கூடிய “தனுஷ் மற்றும் அனிருத்” காம்பினேஷனையும் ரசிகர்கள் என்ஜாய் பண்ணிட்டு தான் இருக்காங்க. “3” திரைப்படத்திலிருந்து வந்த “Why this kolaveri di?” பாடல்ல தொடங்குன இவங்க காம்போ தமிழ் சினிமால தவிர்க்கமுடியாத காம்போவாதான் இருக்கு , நம்ம சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ஒரு ஸ்டார் பட்டம் கொடுத்ததும் அனிருத் ஓட மியூசிக் தான்
ஒரு பிளே பேக் சிங்கரா, ஒரு மியூசிக் டைரக்டரா அவரு நம்ம தமிழ் சினிமாக்கு ஒரு முக்கியமான அங்கமாவே இருக்காரு அடுத்த சில வருடங்களுக்கு நாம கண்டிப்பா அனிருதொட மியூஸிக்க என்ஜாய் பண்ணுவோம். ” இளையராஜா “, “ஏ ஆர் ரகுமான்” மாறி ஒரு சகாப்தமா நம்ம அனிருத் அவர்களும் வருவாரு!!!
வளர்ந்து வரும் சகாப்தத்திற்கு பல சாதனைகள் படைக்க சூரியன் FM-இன் வாழ்த்துக்கள்!!!!
RJ Jae, Vellore