தமிழ் சினிமாவோட நகைச்சுவை உலகத்துல அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி, எப்போவும் சரி அழியாத இடத்த பிடித்தவர் தான் நகைச்சுவை நடிகர் செந்தில். இன்னைக்கு அவருக்கு பிறந்தநாள் ( March 23 ,1951 ). தமிழ் சினிமால 250-ம் மேல படங்கள்ல நடிச்ச அவரோட திரைத்துறை வாழ்க்கையை கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமா?
தமிழ் சினிமாவுல சின்ன சின்ன வாய்ப்புகளால தான் இவரோட கலைப்பயணம் ஆரம்பிச்சது. ஆரம்பத்துல சின்ன காமெடி வேடங்கள்ல, கூட்டக் காட்சிகள்ல தான் நடிச்சிட்டு இருந்தாரு. அப்புறம் அவரோட தனித்துவமான நடிப்பு, பேசுற ஸ்டைல், இயல்பான நடிப்பு மூலமா மக்கள் கவனத்தை ஈர்க்க ஆரம்பிச்சாரு. அப்படியே படிப்படியாக உயர்ந்து, 1980களிலிருந்து 1990 வரைக்கும் தமிழ் சினிமாவுல ரொம்ப பிஸியான காமெடி நடிகரா மாறிட்டாரு.
குறிப்பாக கௌண்டமணி ஓட சேர்ந்ததுக்கு அப்புறம் இவரோட கரியர் உச்சத்துக்கே போய்டுச்சுன்னு சொல்லலாம். “செந்தில்”ன்னு சொன்னாலே “கவுண்டமணி” தான் ஞாபகத்துக்கு வருவாரு. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச கரகாட்டக்காரன் படத்துல வர வாழைப்பழ காமெடி சீன் இப்போவும் செம்ம ஹிட்டா இருந்து, மீம்ஸ்ல கூட ரொம்ப யூஸ் பண்ணப்படுது.
கௌண்டமணி கூட சேர்ந்து செந்தில் நடிச்ச காலங்கள், தமிழ் சினிமாவோட பொற்காலம் மாதிரி இருந்துச்சு. அந்த காலத்துல கிட்டத்தட்ட எல்லா பெரிய ஹீரோ படங்களிலும் செந்திலுக்கு தனியா காமெடி டிராக் இருந்தது. அவரைப் பற்றி பேசும்போது கரகாட்டக்காரன், படையப்பா, ஜென்டில்மேன், நாட்டாமை மாதிரி படங்கள் கண்டிப்பா ஞாபகத்துக்கு வரும். என்னதான் இப்போ அவரு சினிமால நடிக்கலைனா கூட நம்ம சிரிக்கறதுரத்துக்காக பல திரைப்படத்துல சீன் குடுத்து இருக்காரு.
இப்படி அவர் நடித்த எல்லா படங்களையும் தான் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர்னு நிரூபிச்சிருப்பாரு. பெரிய விருதுகள் தமிழ் சினிமால அதிகமா அவருக்கு கிடைக்கவில்லை என்றாலும், மக்கள் மனசுல “சிறந்த நகைச்சுவை நடிகர்”னு ஒரு பெரிய இடம் பிடிச்சிருக்காரு செந்தில். இந்த நாளில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கிறதுல என்னக்கு ரொம்ப சந்தோசம்.

