Indian Cinema-ல தனித்துவமான அடையாளத்தோடு தன்னை நிலைநிறுத்திய நடிகைகள்ல முக்கியமானவர் தான் ஸ்ருதி ஹாசன். Acting-கிற ஒரே திறமையில தன்னை சுறுக்கிக்கமா Singing, Music, Social talk-னு எல்லாத்துலயும் தன்னோட Bold-ஆன Presence காமிச்சு ரசிகர்களோட மனசுல இடம் பிடிச்சவங்க.
உலகநாயகன் கமல்ஹாசன் சரிகா தம்பதிகளுக்கு மகளாப் பிறந்தாலும், “Star Kid”-ங்கிர அடையாளத்துக்குள்ள சிக்கிக்காம, தன்னோட தனிப்பட்ட முயற்சியால சினிமா துறையில் உயர்ந்து வந்தவங்க.
குழந்தைப் பருவமும் இசை மீது கொண்ட காதலும்:
1986 ஜனவரி 28-அம் தேதி பிறந்த ஸ்ருதி ஹாசன், சென்னை-ல தன்னோட schooling முடிச்சி, மும்பைல ஒரு Private college-ல Psychology degree Complete பண்ணாங்க. சின்ன வயசுல இருந்தே Music மேல அதிகமா interest இருந்ததுனால, லண்டன்ல Western & Classical Music கத்துகிட்டு The Extramentals-கிற Music Band-ல தன்னுடைய இசை திறமைய காமிச்சாங்க.
ஸ்ருதிஹாசன் உடைய குரலே ஒரு unique-ஆன குரல். Vaaranam Aayiram-ல அவங்க பாடுன “அடியே கொல்லுதே” பாட்டா இருக்கட்டும் இல்ல 7aum Arivu “ஏலே லாமா” பாட்டா இருக்கட்டும் இல்ல அவருடைய அப்பா நடிச்ச Thug life படத்துல வர “விண்வெளி நாயகா” Song-ஆ இருக்கட்டும் இந்த பாடல்கள் எல்லாமே அவங்களுடைய voice-ல கேக்க அவ்ளோ Energetic-ஆ இருக்கும்.
திரையுலக அறிமுகமும் தமிழ் ரசிகர்களும்:
2009 Bollywood-ல release ஆன “Luck” movie மூலியமா தன்னோட adult debut acting-அ தொடங்கினாங்க. “Ayesha”- என்கிற கதாபாத்திரத்தில நடிச்ச அந்தப் படம் அவங்களுக்கு பெரிய வரவேற்பு ஏற்படுத்திக் கொடுக்கல, ஆனா தமிழ்ல Actor சூர்யா கூட சேர்ந்து ‘சுபா’ங்கிற கதாபாத்திரத்தில் நடிச்ச ஏழாம் அறிவு படம் அவங்களுக்கு ஒரு Career Build படமா மாறிடுச்சு, Medical Student-அ ஒரு உணர்ச்சிபூர்வமான Character-அ நடிச்ச ஸ்ருதி ஹாசன் தமிழ் ரசிகர்களோட கவனத்தை ஈர்த்தாங்க.
திரைப்படமும் உணர்ச்சி நடிப்பும்:
ஏழாம் அறிவு படத்தை தொடர்ந்து 2012-ல actor Dhanush கூட சேந்து நடிச்ச படம் தான் “3”. வாழ்க்கையோட மூணு stages-அ விவரிக்கிற இந்த படத்துல Janani-ங்கிற Character-ல நம்ப ஸ்ருதிஹாசன் நடிச்சிருப்பாங்க. அதிக அலட்டல் இல்லாம, அமைதியான முகபாவனைகளோட உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதம், அவரோட acting talent-அ நிரூபிச்சது.
தமிழ் ரசிகர்கள் ஜனனி என்கிற ஸ்ருதிஹாசன கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க, இந்த படம் அவங்களுக்கு முக்கியமான திருப்புமுனையா அமைஞ்சது மட்டுமில்லாம வணிக ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுச்சு. இந்தப் படங்களை தொடர்ந்து
பூஜை,வேதாளம்,சிங்கம் 3,புலி போன்ற படங்கள் நடிச்சு இன்னும் தன்னோட Acting Career-ஆ Strong ஆக்கிட்டாங்க.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை:
தமிழத் தொடர்ந்து Tollywood-ஆன தெலுங்கு திரை உலகில் Anaganaga O Dheerudu, Oh My Friend போன்ற படங்கள்ல நடிக்க தொடங்கி Gabbar Singh,Yevadu, Race Gurram, Srimanthudu-னு சூப்பர் ஹிட் படங்கள் நடிச்சு தெலுங்கு திரையுலகில தனக்கென்று ஒரு ரசிகர் பட்டதை உருவாக்கி ஒரு முன்னணி நடிகையா உயர்ந்து இருக்காங்க.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி-னு தாண்டி Pan India படங்களான “Salaar” போன்ற படங்கள்ல நடிச்சது மட்டும் இல்லாம International English Project ஆன “The Eye”-ங்கிற ஒரு English Psychology Thriller film-லையு நடிச்சிருக்காங்க. இது மூலியமா இவங்க International Actress-ங்கற அடையாளத்தையும் உருவாக்கிக்கிட்டாங்க.
வெளிப்படையும் தைரியமும்:
ஸ்ருதிஹாசன் உடைய Acting, singing எல்லாம் எப்படி மக்களுக்கு பிடித்திருந்ததோ அதே மாதிரி அவங்களுடைய வெளிப்படையான தைரியமான பேச்சும் கருத்துக்கள் கூறும் விதமும் மக்களுக்கு பிடித்திருந்தது. Mental health, Self Confidence, Women’s Self-esteem போன்ற விஷயங்கள்ல அவங்க சொல்ற கருத்துக்கள் பலருக்கும் ஊக்கமளிக்குது.
அழகு, திறமை, அறிவு, தைரியம் இது எல்லாமே combine பண்ண நடிகையாக ஸ்ருதி ஹாசன் இருக்காங்க. இந்த பிறந்த நாள்ல இன்னும் பல சாதனைகள் புரிந்து, இந்தியா சினிமாவை தாண்டி உலகளவில் ஆன சினிமால தனது கலைப்பயணத்தை உயர்த்தி வெற்றிகள் பெற சூரியன் FM வாழ்த்துகிறது.
Article by – RJ Durga

