Cinema News Stories

குட்டி பட்டாசு ரெபா மோனிகா ஜான்..!

அக்கினி சிறகே எழுந்து வா..! பாட்டு தெரிஞ்ச எல்லாருக்கும் இவங்கள கண்டிப்பா தெரிஞ்சு இருக்கும்..!

2016 –ல நிவின் பாலியுடன் இணைந்து வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய Jacobite Swargarajyam-ன்ற மலையாள திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்..! இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் நீரஜ் மாதவ்வுடன் அவரது இரண்டாவது படமான பைப்பின் சுவத்திலே பிரணயம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது..!

அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து மாடலிங் சினிமானு எல்லாத்துலயும் வலம் வந்தாங்க..! 2019 அட்லீ இயக்கத்துல தளபதி நடிச்ச BIGIL திரைப்படத்துல அனிதா Character-ல சிங்கப் பெண்ணா நடிச்சு நம்ம வீட்டு பொண்ணு ஆகிட்டாங்க…!

இதுக்கு மத்தியில Santhosh Dhayanithi-யோட இசையில Cute பட்டாசு Reba Monica John குட்டி பட்டாசா இளைஞர்கள் மனசுல இடம் பிடிச்சாங்க..! தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு எல்லா மொழிகள்லயும் நடிச்சுட்டு வர Reba Monica முன்னணி நடிகையா வலம் வரணும்னு காதல் மாதத்தில் பிறந்த காதல்பூ Reba Monica John-க்கு SURYAN FM- ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Article By RJ 🐟👻😉(MEENU)

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.