ஸ்ம்ருதி மந்தனா! பேரு சொன்னதும் மனசுக்கு நியாபகம் வர நிமிஷம் RCB-க்கு கப் அடிச்சி குடுத்த மொமெண்ட் தான். பின்ன! RCB டீம் ஜெயிக்கனும்னு எதிர்பார்த்த நமக்கு அந்த சந்தோசம் குடுத்தவங்க ஸ்ம்ருதி தான். இவங்க லைப்ல கிரிக்கெட்னு ஒரு விஷயம் எப்படி வந்துச்சுனு தெரிஞ்சிக்க ரொம்ப ஆசை.
ஸ்ம்ரிதி மந்தனாவோட இந்த கிரிக்கெட் பயணம் பல விஷயங்கள நமக்கு கத்து குடுக்கும். ஜூலை 18, 1996-ல மும்பைல பிறந்தவங்க ஸ்ம்ருதி. இவங்க குடும்பத்தோட கிட்டத்தட்ட நிழல் மாதிரி தான் கிரிக்கெட் இருந்துச்சுனு சொல்லலாம். ஏன்னா ஸ்ம்ருதி அப்பா District லெவல்ல கிரிக்கெட் விளையாடி இருக்காரு.
ஸ்ம்ருதியோட அண்ணாவும் கிரிக்கெட் பிளேயர். ஆனா கொஞ்ச நாள்ல கிரிக்கெட் விட்டுட்டு இப்போ பேங்க் மேனேஜரா இருக்காரு. ஒரு உண்மைய சொல்ல போனா ஸ்ம்ருதி கிரிக்கெட்ல இந்த அளவுக்கு இருக்க அவங்க அண்ணாவும் ஒரு காரணம். எப்டின்னா ஸ்ம்ருதி அண்ணா ஷ்ராவன் கிரிக்கெட் விளையாட கிரவுண்ட் போகும் போது கூட ஸ்ம்ருதியும் போயிருக்காங்க.
அந்த டைம்ல ஏற்பட்ட ஸ்பார்க் இன்னைக்கு Indian டீம்ல இருக்காங்க.
அந்த ஒரு ஸ்பார்க்னால கொஞ்சம் கொஞ்சமா விளையாட ஆரம்பிச்சி அவங்க பேரு நியூஸ் பேப்பர்ல வந்துச்சு. அப்ப ஸ்ம்ருதி அந்த பேப்பர்ல இருக்க படங்கள கட் பண்ணி ஒரு குட்டி புக்கா போட்டு வச்சிருக்காங்க. எனக்கு அத நினைக்கும்போது ஒரு விஷயம் தோணுது.
நான் சின்ன பொண்ணா இருக்கும் போது எனக்கு புடிச்ச ஹீரோவோட படத்தை கட் பண்ணி வெச்சிக்கறது எனக்கு பழக்கம். ஆனா இவங்க இவங்களோட வெற்றிய பதிவு பண்ணிருக்காங்கனு சொல்லலாம்.
அதுலயும் அவங்க அப்பா என்னைக்கும் அவங்களுக்கு நோ சொன்னது இல்லயாம். அவங்க அண்ணா நெட் செஷன் போகும்போது ஸ்ம்ருதிக்கு Lob Balls போட்டுருக்காரு அவங்க அப்பா.
ஸ்ம்ருதி அவங்க அண்ணா ஷ்ராவன் ரெண்டு பேருமே right handed Batsman. ஆனா அவங்க அப்பாக்கு left handed batsman மேல ஈர்ப்பு அதிகமா இருந்ததுனால ஸ்ம்ரிதி left பேட்டிங் ஸ்டார்ட் பண்ணாத சொல்லிருக்காங்க. ஸ்ம்ருதி அம்மாவும் அவங்க கிரிக்கெட் விளையாட ரொம்ப சப்போர்ட் பண்ணிருக்காங்கனு தான் சொல்லணும்.
நம்ம வீட்ல எக்ஸாம்ஸ் வந்தா படிக்கதான் சொல்லுவாங்க. ஆனா ஸ்ம்ருதி அம்மா ஸ்ம்ருதிக்கு படிப்பு கிரிக்கெட் ரெண்டையும் பேலன்ஸ் பண்றது கஷ்டம்னு ஸ்ம்ருதிய சயின்ஸ் குரூப் எடுக்க வேணாம்னு சொல்லிட்டாங்க.
அப்டித்தான் ஸ்ம்ரிதி கிரிக்கெட் பயணம் ஸ்டார்ட் ஆச்சுன்னு சொல்லலாம்.
அவங்க 16 வயசுல T20 மேட்ச்ல இந்தியக்காக விளையாடி அதிகமான ஸ்கோர் அடிச்சாங்க. 2014 ஆகஸ்ட் மாசம் நடந்த வோர்ம்ஸ்லேயில் இங்கிலாந்து பெண்களுக்கு எதிரான டெஸ்ட் மேட்சுல ஸ்ம்ருதி முதல் இன்னிங்சில் 22 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 51 ரன்களும் எடுத்தாங்க.
உண்மைய சொல்லப் போனா இது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ஒரு வரலாற்று வெற்றி. அப்போதுல இருந்து ஸ்ம்ருதி நம்ம இந்தியாவோட முக்கியமான தூண்களான ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் இப்போ ஓய்வு பெற்ற மிதாலி ராஜ் அவங்களோட பேட்டிங் தூண்களில் ஒருவர் ஆயிட்டாங்க.
ஸ்மிருதி மந்தனா 2017-ல இந்தியா ஐசிசி மகளிர் ODI உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வரத்துக்கு முக்கிய காரணமா இருந்தாங்க. ஆனா Finalsல 9 ரன்கள் வித்தியாசத்துல இங்கிலாந்து ஜெயிச்சிருச்சு. 2005-க்கு அப்புறம் இந்தியாவோட முதல் உலகக்கோப்பை Finals இதுதான். ஸ்ம்ருதி பத்தி சொல்லனும்னா மிதாலி, ஹர்மன்பிரீத் இவங்களுக்கு அப்புறம் ஸ்ம்ருதி தான் மூன்றாவது அதிக ஸ்கோர் அடிச்சிருக்காங்க.
2019 ல ஸ்மிருதி மந்தனா, ஐசிசி மகளிர் தரவரிசையில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆனாங்க. அதே டைம்ல இந்தியாவின் இளைய T20 கிரிக்கெட் கேப்டன் அப்படிங்கற பெருமையும் கெடச்சிது. 2023 ல ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில இந்திய மகளிர் அணியோட துணை கேப்டனா இருந்து தங்க பதக்கம் ஜெயிச்சாங்க.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியோட கேப்டனா இருந்து இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஐபிஎல் 2024 பட்டத்தையும் ஜெயிச்சிருக்காங்க. இதெல்லாம் அவங்களோட 20-களின் நடுப்பகுதி மட்டும் தான். ஸ்மிருதி மந்தனா, அவங்களுக்கு இன்னும் நீண்ட பயணம் இருக்கு.
இப்படி அவங்க கிரிக்கெட் புள்ளிவிவரங்கள் எடுத்துக்கிட்டா முதலிடத்தில் இருக்காங்க. அதுமட்டும் இல்ல ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்ல 2,000 ரன்களை தாண்டிருக்காங்க. இதுக்கு முன்னாடி இந்திய பெண்களான மிதாலி மற்றும் ஹர்மன்ப்ரீத் இன்று வரை டி20 போட்டிகளில் 2000 ரன்களைக் தாண்டிருக்காங்க.
குறிப்பா பெண்கள் ஒருநாள் போட்டிகளில், ஸ்மிருதி மந்தனாவுக்கு முன்னாடி 5 இந்திய பேட்டர்கள் மட்டுமே அவங்க வாழ்க்கையில் 2,000 ரன்களுக்கு மேல் எடுத்துருக்காங்க. இவங்களோட இந்த பயணத்தை பத்தி தெரிஞ்சிக்கும்போது தான் ஒரு விஷயம் புரிஞ்சிது. ஒரு ஸ்பார்க் வந்தா அத follow பண்ணா கண்டிப்பா ஸ்பார்க் நம்ம லைப்ல பெரிய மாற்றத்த கொண்டு வரும்.