மாடலிங் என்ற சாவியை பயன்படுத்தி தனக்கான சினிமா கதவை திறந்தவர் “நடிகை வேதிகா”.

நடனத்தில் க்யூட் குட்டிப் பிசாசு.

அர்ஜூன் நடித்த ‘மதராஸி’ படத்தில் கிடைத்தது அறிமுகம்,

அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடித்த முனி படத்தில் சிறப்பாக நடித்து, தான் ஒரு திறமையான நடிகை என நிரூபித்தார்.

‘சக்கரக்கட்டி’ ,‘‘மலை மலை’ உள்ளிட்ட படங்களில் நடித்தாலும், காளை படத்தில் இவரது க்யூட்டான குட்டிப் பிசாசு டான்ஸ் ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளிகுவித்தது.

மாடர்ன் கதாபாத்திரத்தில் மட்டும் வந்த வேதிகா, பாலா இயக்கி தயாரித்த ‘பரதேசி’ படத்தில் அங்கம்மா கதாபாத்திரத்தில், தன்னுடைய முழு கலரையும், அப்படியே கருப்பாக மாற்றி அவர் கொடுத்த நடிப்பு வேதிகாவுடைய நடிப்புஆர்வத்தின் வேறொரு பரிணாமத்தை காட்டியது.

கடைசியாக காஞ்சனா 3-ல் நடித்த வேதிகா… நீண்ட இடைவெளிக்கு பின் ’பேட்டராப்’, ‘ஜங்கிள்’ என பல படங்களிலும் Ott தளத்தின் களத்திலும் விரைவில் நடிப்பு தடத்தை பதிக்கவுள்ளார்.

36 வயதில் அடியெடுத்து வைக்கும் வேதிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.