விஜய் என்ற மூன்றெழுத்து…. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மாபெரும் எனர்ஜி.. இளைஞர்களின் உற்சாகம்.. குழந்தைகளின் சந்தோசம்….குடும்பங்களின் கொண்டாட்டம் என நடிகர் விஜய்க்கு அத்தனை வயதிலும் ரசிகர்கள் கூட்டம் உண்டு.
அதிகம் ரசிகர்களைக் கொண்ட முன்னணி நடிகரில் இவரும் ஒருவர்..
கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்ட தமிழ் ஹீரோ தளபதி மட்டுமே.
இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.. இவருடைய அண்ணாமலை படத்தின் டயலாக் பேசி தான் கைத்தட்டல் வாங்கினாராம்.
தளபதி விஜய் திரைத்துறைக்கு வந்ததும் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு இணைந்து நடித்த செந்தூரப் பாண்டி திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்போது GOAT திரைப்படத்தில் AI-ல் விஜயகாந்த் அவர்களை ஒரு காட்சியில் வர வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே போல் பவதாரணியின் குரலையும் AI மூலமாக GOAT திரைப்படத்தில் உபயோகப்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் அவர்களை முதன் முதலாக ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய திரைப்படம் திருமலை. அன்று தொடங்கி லியோ வரை ஆக்ஷன் காட்சிகளில் டூப் இன்றி நடித்து மாஸ் காட்டி வருகிறார். ஆல் ஏரியாலயும் அண்ணன் கில்லிடா என்பது மாதிரி பாட்டு, நடனம், காமெடி செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாவிலும் அண்ணன் கில்லி தான்.
43 வயது வரை இளையதளபதியாக இருந்து பின்னர் மெர்சல் திரைப்படத்தின் மூலம் தளபதியாக மாறினார். இவரது ஆடியோ லாஞ்சில் கண்டிப்பாக மோட்டிவேஷனல் ஸ்பீச் இருக்கும் அதோடு குட்டி கதையும் இருக்கும் அதற்கு ரசிகர்களிடம் மவுசு அதிகம். இப்போது அதை தாண்டி விஜய் அவருடைய ரசிகர்களை வேன் மீது ஏறி நின்று பார்க்கும் சம்பவம், வேன் மீது நின்று ரசிகர்களுக்கு தன் ஸ்டைலில் பறக்கும் முத்தம் கொடுப்பது, செல்பி எடுப்பது என அனைத்தும் ரசிகர்களின் விருப்பத்துக்கு உரியதாகி இருக்கிறது.
படம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை விஜய் அண்ணாவை பார்த்தா மட்டும் போதும் அப்படின்னு சொல்ற ரசிகர்கள் கொண்டவர் நடிகர் தளபதி விஜய். ஒரு சில நடிகர்களுக்கு ஆண் ரசிகர்கள் அதிகமாக இருப்பார்கள், ஒரு சில நடிகருக்கு பெண் ரசிகர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால் ஆண் பெண் பாகுபாடின்றி சம அளவில் ரசிகர்கள் கொண்டவர் தளபதி விஜய்.
வரப்போகும் GOAT மட்டுமல்ல இன்னும் நிறைய பிளாக்பஸ்டர் திரைபடங்கள் விஜய் நடிப்பில் வர வேண்டும் என்பது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஏக்கம். ஆனால் தளபதி விஜய் சினிமாவை தாண்டிய மக்களுக்கான பாதையை தேர்ந்தெடுத்து விட்டார். தான் கால் பதித்த இடங்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய தளபதி விஜய் வரும் காலத்திலும் வெற்றி பெற வாழ்த்துகள்.