Specials Stories

History of ASHES in Tamil

History of ASHES in Tamil
History of ASHES in Tamil

History of ASHES : கிரிக்கெட் Fan ஆஹ் நீங்க அப்ப கண்டிப்பா ஆஷஸ் பற்றி தெரியாம இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நீங்க 2 மாசம் மட்டும் T20 league மேட்ச் பார்க்கிற ஆள்-னா அப்ப கிரிக்கெட் ஓட Best Rivalry & அதோட வரலாறு பற்றி இப்ப தெரிஞ்சிக்கோங்க .

ASHES
உலக கிரிக்கெட் ஓட பழமையான மற்றும் மிகுந்த பிரபலமான போட்டித் தொடராக அறியப்படறது தான் ஆஷஸ் தொடர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளின் இடையே 140 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. வெறும் கிரிக்கெட் தொடர் அல்லாது, தேசிய பெருமை, விளையாட்டு பெருமை மற்றும் தீவிர ஆவலின் சின்னமாக ஆஷஸ் பார்க்கப்படுகிறது.

History of ASHES in Tamil
History of ASHES in Tamil

ஆஷஸ் என்ற பெயர் உருவான பின்னணியில் ஒரு சிறிய கிண்டல் தான் காரணம்.

1882-ல், லண்டன் – The Oval மைதானத்தில் நடைபெற்ற ஒரே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை மிகக் குறைந்த ரன்னில் வீழ்த்தியது. அந்நாளில் இங்கிலாந்து தன் நாட்டில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைவது மிகப் பெரிய அதிர்ச்சியாக கருதப்பட்டது. அடுத்த நாள் பிரபலமான The Sporting Times பத்திரிகையில் ஒரு கிண்டல் நகைச்சுவை குறிப்பாக, “English cricket has died, and the body will be cremated. The ashes will be taken to Australia.” என்ற செய்தி வெளியானது. இதுவே கிரிக்கெட் வரலாற்றில் “Ashes” என்ற வார்த்தையின் பிறப்பாகியது.

சிறிய மண்பானை போன்ற இந்தச் சின்னத்தில், எரிக்கப்பட்ட கிரிக்கெட் பேல் (bail) நெருப்புத் தூள் இருப்பதாக நம்பப்படுகிறது. இது கிரிக்கெட்டின் மிகப் பெருமைக்குரிய சின்னமாக கருதப்படுகிறது. இந்த கிண்ணம் தற்போது லண்டன் MCC Museum-ல் பாதுகாக்கப்படுகிறது; நாடுகளுக்கு இடையே பயணிக்காது. ஆனால் வெற்றி பெற்ற அணிக்கு அதன் பிரதியை வழங்குகிறார்கள்.

1882-83 காலகட்டத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, அந்தத் தொடரை “The quest to regain the Ashes” என்று அழைத்தனர். அந்நாள் முதலே இரு அணிகளும் ஆஷஸ் Rivalry மூலம் இணைக்கப்பட்டன.

History of ASHES in Tamil
History of ASHES in Tamil

இத்தனை வருட Ashes Series ஓட Best moments பத்தி இப்ப பாப்போம்

  1. 1932–33 Bodyline Series – கிரிக்கெட் உலகமே அதிர்ந்த காலம்
    இங்கிலாந்து, Don Bradman-ஐ அடக்கணும்னு Bodyline bowling னு dangerous திட்டம் போட்டாங்க. இதுவே கிரிக்கெட்டுல விதிகளை மாற்றந்தக்க அளவுக்கு பெரிய சர்ச்சை ஆச்சு!
    இது Ashes வரலாற்றிலேயே most controversial & unforgettable chapter.
  2. Don Bradman’s 1930 Ashes – ஒரு மனிதனா? ராட்சசனா?
    1930 Ashes-ல Bradman 974 ரன்ஸ் அடிச்சார்!
    இது இப்போதைக்கும் break ஆகாத world record.
    4 டெஸ்ட்ல இப்படி அடிச்சவர் மனிதரா இல்ல alien-ஆனு debate வந்தது!
  3. 1956 – Jim Laker 19 wickets!
    ஒரே டெஸ்ட் போட்டில 19 விக்கெட்!
    இப்படி ஒரு bowling miracle இன்னைக்கு கூட யாராலும் touch பண்ண முடியல.
  4. 1981 – “Botham’s Ashes”
    Ian Botham literally single-handed-ஆ இங்கிலாந்து அணியை காப்பாத்தினார்.
    அவர் Century + Bob Willis-ன் வேகப்பந்து சேர்ந்து Headingly miracle நடக்கச் செய்தது.
    அந்த தொடரை எல்லாரும் “Botham’s Ashes”ன்னே அழைத்தாங்க.
  5. 2005 Ashes – உலகமெங்கும் cricket fever
    இது “Best Test Series Ever Played”ன்னு உலகமே சொன்ன தொடரு.
    • Edgbaston thriller: 2 ரன் வித்தியாசம்!
    • Flintoff – Lee friendship moment
    • Vaughan leadership
    • Australia-England neck-to-neck fights
    2005 Ashes = pure adrenaline!
  6. 2010–11 – England’s Historic Win in Australia
    24 வருடத்துக்கு பிறகு, England ஆஸ்திரேலியால Ashes வென்றது.
    • Alastair Cook-ன் dream run – 766 runs!
    • Anderson, Swann bowling domination!
    இதுதான் modern England-ன் rise ஆரம்பமான தொடர்.
  7. 2019 Headingly – Ben Stokes miracle
    இது Ashes வரலாற்றிலும், cricket வரலாற்றிலும்
    GREATEST TEST INNINGS EVERன்னு சொல்லப்படும் ஆட்டம்.
    Ben Stokes 135* அடிச்சு, impossible ஆன chase-ஐ possible ஆக்கினார்.
  8. Steve Smith 2019 comeback mastery
    2018 sandpaper scandal க்கு பிறகு,
    Steve Smith–ன் Ashes comeback unbelievable!
    Twin centuries in first Test, series முழுக்க domination.
    Pure class, pure redemption.
History of ASHES in Tamil
History of ASHES in Tamil

Bodyline-ல இருந்து Stokes-ன் miracle வரை, Ashes ஒவ்வொரு தொடரும் நம்ம fans-க்கு ஒரே Goosebumps, tension, thrill அனைத்தையும் ஒரே நேரத்துல கொடுக்கும். அதனால தான் Ashes, இன்னிக்கு கூட கிரிக்கெட் உலகை turn பண்ணும் power வைத்திருக்கும் ஒரே தொடரு. வந்தா double excitement… முடிஞ்சா next series எப்போன்னு wait பண்ண வைக்குது!

Article by RJ Kamal

About the author

Sakthi Harinath