இன்னைக்கு இந்தியா முழுக்க ரிலீஸ் ஆகுற ஒவ்வொரு படங்களும் U, U/A, (A)ன்ற இதுல ஏதோ ஒரு Certificate ஓட தான் ரிலீஸ் ஆகும். நம்மல்ல பலரும் பெருசா இந்த Certificatesலாம் பாத்து படங்களுக்கு போறதில்ல.A certificate படங்கள் மட்டும் சமூக வலைத்தளங்கள்ல பேசு பொருளாயிருக்கும், அந்த படங்களுக்கு மட்டும் குழந்தைகளை கூட்டிட்டு போறத தவிர்ப்போம்.
ஆனா சில பெரிய ஹீரோக்களோட படங்களுக்கு மட்டும் அது U வா,U/A வா , A வான்னு எல்லாருக்கும் தெரியுற அளவு சமீபகாலங்கள்ல அதை போஸ்டர் விட்டு தயாரிப்பு நிறுவனமே பிரபலபடுத்துவாங்க.
CBFC யால சில படங்கள் ரிலீஸ் தேதி மாறியிருக்கு, சில படங்கள் வெளியாகமா போயிருக்கு, ஏகப்பட்ட படங்கள் நிறைய Cuts & Edits ஓட வெளியாகியிருக்கு.அப்படி ஒவ்வொரு படங்களும் வெளியாக ஏன் Censor Certificate வாங்கணும்? ஏன் இதை நடைமுறைக்கு கொண்டு வந்தாங்கணு தெரிஞ்சிப்போம்.
இந்தியால இன்னைக்கு படங்களுக்கு தணிக்கை (Censor) செய்யக்கூடிய இந்த முறை பிரிட்டிஷ் ஆட்சி காலத்துலையே ஆரம்பமாகிருச்சு!
1918வது வருஷம் பிரிட்டிஷ் அரசாங்கம் Cinematograph Act-ன்ற சட்டத்த முதல் முறையா கொண்டுவராங்க. அது ஒவ்வொரு மாவட்ட அளவுல District Magistrate வெளியீட்டுக்கு தயாரான படங்களை தணிக்கை செஞ்சாங்க.
அதுக்கான ஒரு முக்கிய காரணம் சுதந்திரத்துக்காக போராடுற மக்களோட போராட்ட குரல் திரைப்படங்களா வெளியாச்சுனா இன்னும் வேகமா போய் மக்கள்கிட்ட சேர்ந்திர கூடாது,அரசியல் பாதுகாப்பு,சட்ட ஒழுங்கு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை கட்டுப்படுத்த தான் அப்பவே இந்த Cinematograph Act நிறைவேற்றினாங்க.
இந்தியா சுதந்திரம் வாங்கின அப்பறம் இந்தியா அரசாங்கம் 1952ல Cinematograph Actல சில மாற்றங்களை கொண்டுவந்து CENTRAL BOARD OF FILM CERTIFICATION -CBFC’ய கொண்டுவராங்க.
இந்த தணிக்கை குழுவோட நோக்கம் படங்களை தடை செய்றதில்ல, மக்கள் எந்த மாதிரியான படங்களை பார்க்கணும்னு தணிக்கை செஞ்சு அதுக்கு எந்த மாதிரி Censor Certificate வழங்குறது.இதனால மக்களுக்கு எந்த படங்களை பார்க்கணும் ,பார்க்க வேண்டாம்னு முடிவு எடுக்க முடியும்.
CBFC கொடுக்க கூடிய Certificates.
U – Universal
இது போதுவா குடும்ப படங்கள், கமர்ஷியல் படங்களுக்கு சுலபமா கிடைச்சிரும். இதோட அர்த்தம் குழந்தைகள்லருந்து பெரியவங்க வரை எல்லாரும் U சான்றிதழ் இருக்க படங்களை பார்க்கலாம்.
U/A – UN RESTRICTED WITH PARENTAL GUIDANCE
இந்த தணிக்கை சான்றிதழ் 1983ல கொண்டு வந்தாங்க.
சில action காட்சிகள் ,ஒரு சில adult காட்சிகள் இலைமறையாக காயாக இருக்கும். எடுத்துக்காட்டுக்கு ஒரு பாட்டுல வர கொஞ்சம் நெருக்கமான காட்சிகளா இருக்கலாம். அப்படியிருந்தா
12வயசுக்கு கீழ இருக்க குழந்தைகள் பெற்றோர்களேட சேர்ந்து இந்த U/A certificate படங்களை பார்க்கலாம்.
இப்போ இந்த U/A certificateல
சில updations & Sub categories அமலாச்சு!
U/A 7+
கொஞ்சமா திகில் காட்சி,சண்டைக்காட்சி , Intimacy இல்லாத romance காட்சிக்கு இந்த தணிக்கை சான்றிதழ்
7 வயசு வரை இருக்க குழந்தைகள் பெற்றோர்களோட பார்க்கலாம்.
எடுத்துக்காட்டா Kids Adventures மற்றும் Family Entertainers.
U/A 13+
இதுல குறைவான சண்டை ,இரத்த காட்சிகள், கட்டிப்பிடிக்குறது மாதிரி romance காட்சிகள் இருக்க படங்களுக்கு இந்த U/A 13+ சான்றிதழ் .
எடுத்துக்காட்டா Teen drama,Sports film, Social message படங்கள் சொல்லலாம்.
U/A 16+ – STORNG PARENTAL GUIDANCE
இதுல violence mid levelல இருக்கும் ,Matured romance காட்சிகள் இருக்கும்
ஆனா pornographic visuals, Hate speech படம்முழுக்க இல்லாம இருந்தா U/A 16+ சான்றிதழ் கிடைக்கும்.
எடுத்துக்காட்டா Crime Thriller, அரசியல் படங்கள் சொல்லலாம்.
(A) -Adults Only
18 வயசுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்க கூடியபடம்
இதுல அதிகமா Violence,Blood,Initmacy ஆன Adult காட்சிகள் ,வசனங்கள் இருக்கும், அதனால 18 வயசு கீழ இருக்கு யாரும் தியேட்டருக்கு அனுமதி இல்ல.Tvல telecast பண்ணணும்னாலும் அதிகமான cuts & edits இருக்கும்.
ஆனா நம்ம ஊருல பெரும்பாலும் இதை தியேட்டர்கள் பெருசா follow பண்றதில்ல , காரணம் இப்பலாம் தியேட்டருக்கு ஆட்கள் வரதே பெரிய விஷயமா இருக்கு. சில Multiplex தியேட்டர்ஸ்ல மட்டும் முதல் ரெண்டு ,மூணு நாளைக்கு follow பண்றாங்க.
(S) – Specialized Audience
இது பெரும்பாலும் தியேட்டர்ல வெளியாகுற படங்களுக்கு கிடையாது.
Doctors, Scientist மாதிரி குறிப்பிட்ட துறைக்கு மட்டும் எடுக்கப்படுற documentary மாதிரியான படங்களுக்கு வழங்க கூடிய தணிக்கை சான்றிதழ்.
இப்படி ஒவ்வொரு படங்களுக்கும் U, U/A, A ,S certificate கொடுக்க கூடிய CBFC மேல நிறைய விமர்சனங்களும் இருக்கு.
அதிக cuts & mute சொல்லறது -Over censorship, படைப்பு சுதந்திரத்துல அதிகமா தலையிடுறது,பல நேரங்கள்ல அரசியல் அழுத்தம் போன்ற காரணங்களால முக்கிய காட்சிகளை cut சொல்றதுனு பல இயக்குனர்கள் புகார் வச்சிருக்காங்க CBFC மேல.
தியேட்டர்ல வெளியாகுற படங்கள் போல OTTல நேரடியா வெளியாகுற படங்களுக்கு CBFCயால பெரிய அழுத்தம் இல்ல.ஆனா Intermediary Guidelines & Digital Media Ethics Code Rules ,2021 படி சில கட்டுப்பாடுகள் நம்ம இந்தியால இருக்கு.
ஒவ்வொரு படத்தோட Thumbnail and Content Description-ல Violence, Sex / Nudity , Language, Drugs,Horrorனு viewers முன்னாடியே தெரிஞ்சிக்குற மாதிரி display பண்ணும்.
அதே போல U, U/A 7+, U/A 13+, U/A 16+ ,A (18+) இது மாதிரி Age rating கொடுக்கணும்..ஆனா, இந்த rating உள்ள படங்கள் Certificateக்கு ஏத்த Censor பண்ணியிருக்காது.
அதனாலயே அதிக அரசியல் பேசம் படங்கள்,Sexual Contents அதிகம் உள்ள படங்கள் நேரடியா OTTல ரிலீஸ் ஆகுது.
OTTக்கு ஏன் சென்சார் இல்லைனா இது viewer choice Personal screening. ஆனா Theatreல பொதுமக்கள் எல்லாரும் வந்து பாக்குறதால அதிக கட்டுப்பாடுகள் இருக்கு.
இந்தியால CBFC தடை மூலமா சில படங்கள் வெளியாகமாவும் இருக்கு. சில படங்களை கடைசி நேரத்துல உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் போய் மேல் முறையீடு செஞ்சும் வெளியிட்டு இருக்காங்க.
நீங்க Censor Certificate note பண்ணி தியேட்டர்ல பார்த்த படம் என்னனு Comments-ல சொல்லுங்க.இது போல பல தெரியாத விஷயங்கள் தெரிஞ்சிக்க சூரியன் FM டிஜிட்டல் பக்கங்களை follow பண்ணுங்க.
ARTICLE BY RJ SRINI.

