இந்தியாவோட பெரிய Petrol Bunk எங்கயிருக்குனு தெரியுமா ? வாங்க தெரிஞ்சிக்கலாம்…!
இன்னைக்கு நம்ம ஊர்ல Bero full ஆ பணம் வச்சியிருக்கவங்கள விட Two wheeler / Four wheelerல TANK full ஆ Fuel வச்சிருக்கவங்க தான் பெரிய ஆளு….!
அந்தளவு Petrol , Diesel, CNG ஓட Demand நாளுக்கு நாள் கடந்த ஒரு மாசமா அதிகரிச்சிட்டே இருக்கு…!
நம்ம நாட்ல 24/7 இயங்க கூடியது Hospital ,Police station,Bus Station, Railway Station, Petrol Station!
ஆனா இது எல்லாமே இயங்க காரணம் Fuel .
ஒரு வாரம்! Just ஒரே வாரம் எல்லா Petrol Bunkம் Close பண்ணா உங்க கைலயிருக்க ஒரு லட்சம் ரூபாயோட மதிப்பு 80,000 ரூபாயா ஆக கூட வாய்பிருக்கு Inflationனால. அந்தளவு Petrol, Diesel, CNG ஓட தேவையிருக்கு நம்ம நாட்ல இருக்கு ஒவ்வொருத்தருக்கும்.
உலக நாடுகள் எல்லாம் அமைதியா இருக்கு வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல, ஆனா பிரச்சனை வந்து போர் ஆனா அப்பறம் அது முடியுற வரைக்கும் சாமாணிய மக்கள் எல்லாருக்கும் பிரச்சனை தான்.
அதனாலையோ என்னவோ ஒரு பக்கம் Warனு News வந்த உடனே நம்ம மக்கள் Fuel station போய் Water Can, Water tankலலாம் Fuel fill பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.
நீங்களும் கண்டிப்பா Tank fill பண்ணியிருப்பீங்கனு தெரியும்.
நம்ம இந்தியால November,2025 கணக்கு படி ஒரு லட்சத்துக்கும் அதிகமான Fuel stations இருக்கு, இதுல 90% INDIAN OIL(41,664+), BHARAT PETROLEUM (24,605) ,HP(24,418) bunks இருக்கு. உலகளவுல அமெரிக்கா,சீனாக்கு அப்பறம் இந்தியால தான் அதிக Fuel stations இருக்கு.
நாம எப்பவும் Petrol , Diesel, CNG fill பண்ற bunkல அதிகபட்சம் அஞ்சு இல்ல ஆறு Fuel Dispensing Machines இருக்கும்.. இதுவே கிராமங்கள் பக்கத்துல இருக்கு Bunkல ரெண்டு ,மூணு இருக்கும்.
ஆனா நம்ம இந்தியால 52Fuel Nozzles ஓட ஒரு பிரம்மாண்டமான Fuel Station MEGHALAYA,JORABATல இருக்கு. NH 27ல அமைஞ்சிருக்க இந்த Fuel stationல ஒரு நாளைக்கு பல்லாயிரம் கணக்கான Vehicles வந்து போயிட்டு இருக்கு. கிட்டத்தட்ட இந்த Fuel station ,நம்ம தமிழ்நாட்ல Tier 3 Cityல இருக்க ஒரு Bus stand மாதிரி. இங்க Resturants, Car wash area, Toilets,Truck Parking area இப்படி பல விஷயங்கள் இருக்கு.
இந்த பக்கம் போற பலரும் இத Toll Plazaனு தான் சொல்லுங்க ஏன்னா அந்தளவு எப்பவும் busy ஆன Fuel station. இதே போல உலகத்தோட மிகப்பெரிய fuel station USA,TEXASல இருக்கு 120gas pumps ஓட..!
நீங்க கடைசியா உங்க Vehicleக்கு எவ்வளோ ரூபாய்க்கு ,எந்த area bunkல fuel fill பண்ணீங்கனு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க…
இது போல இன்னும் பல சுவாரஸ்யமான பல தகவல்கள் தெரிஞ்சிக்க நம்ம சூரியன் FM டிஜிட்டல் பக்கங்களை follow பண்ணிக்கோங்க.
ARTICLE BY RJ SRINI

