பொதுவா எந்த ஒரு விளையாட்டா இருந்தாலும் அதுக்கு உடல் வலிமை கண்டிப்பா தேவைப்படும். ஆனா இந்த ஒரு விளையாட்டுக்கு நம்ம மூளை எந்த அளவுக்கு வலிமையா சிந்திக்கிது அப்படிங்கிறது தான் தேவை. ஆமா அந்த விளையாட்டு செஸ். அதாவது சதுரங்கம்.
நம்முடைய சிந்தனை சரியா இருந்தா நம்ம சரியான முறையில சிந்திச்சா எதிரிய நம்மளால எளிமையா வீழ்த்த முடியும் அப்படிங்கறத வெளிப்படுத்தும் விதமாக இருக்கக்கூடிய விளையாட்டு தான் இந்த செஸ். மூளைய கூர்மையாக்குற இந்த விளையாட்டு இந்தியாவில் கண்டுபிடிச்சது அப்படின்றத நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு.
இந்த செஸ் விளையாட்டு உருவானதற்கு பல கதைகள் இருந்தாலும் உலக அளவில் அனைவருக்கும் தெரிஞ்ச பொதுவான கத ஒன்னு இருக்கு. கிபி ஆறாம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் தான் இந்த செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கு அப்படின்னு சொல்றாங்க.
அப்போ ஒரு போர்ல அந்த நாட்டோட இளவரசர் இறந்து போக அந்த இளவரசர் எப்படி இறந்து போனார்னு அவரோட அம்மாக்கு தெரிவிக்கிறதுக்காக அவருடைய சகோதரர் இந்த விளையாட்டு மூலமா அவங்க அம்மாவுக்கு எடுத்து சொல்றாரு அப்படின்னு ஒரு பக்க கதை இருந்தாலும்…
இன்னொரு பக்க கதையில ஒரு அரசர் ஓட பையன் ஒரு போர்ல இறந்து போக அதை தாங்கிக்க முடியுமா அந்த அரசர் ரொம்ப மன வருத்தத்தோட இருக்கார். அவர சமாதானப்படுத்த உலகம் முழுக்க இருந்து எத்தனையோ கலைஞர்கள் வருகிறார்கள் ஆனா யாராலயும் அவர சமாதானப்படுத்த முடியல.
இறுதியா இந்தியாவில் இருந்து ஒருத்தர் அங்க போறாரு அந்த மன்னர் கிட்ட , நான் ஒரு விளையாட்டு கண்டுபிடித்து இருக்கேன் சொல்லி சதுரங்க விளையாட்ட விளையாடி காட்டுறார். அப்படி விளையாடும் போது உங்களுடைய மகன் போர்ல இறந்து போகல உங்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்கு உயிர் தியாகம் செஞ்சிருக்கார் அப்படின்னு சொல்றாரு.
இத பார்த்த மன்னர் கவலையிலிருந்து மீண்டும் தன்னோட மகன நினைச்சு பெருமைப்படுறார். இந்த அற்புதமான விளையாட்டு கண்டுபிடிச்ச அந்த நபருக்கு என்ன பரிசு வேணும் அப்படின்னு மன்னர் கேட்க அந்த நபர் இந்த சதுரங்க விளையாட்டுல மொத்தம் 64 கட்டம் இருக்கு. இதுல முதல் கட்டத்துல ஒரு நெல்மணியும் அடுத்த கட்டத்துல முன்னாடி கட்டத்துல இருந்ததை விட இரண்டு மடங்கா வேணும் அப்படின்னு கேக்குறாரு.
இதைக் கேட்ட மன்னர் தங்கம் வைரம் எதுவும் கேட்காம வெறும் நெல்மணியை கேட்கிறானே அப்படின்னு ஆரம்பத்துல சரி அப்படின்னு சொல்றாரு ஆனா அந்த புத்திசாலி கேட்ட மாதிரி ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு நெல்மணிய வச்சு அதை அடுத்த கட்டத்தில் இரண்டாக்கனா அந்த நெல்லோட அளவு இந்த பூமியை பாதி நிரப்பிடும் அப்டினு அப்பதான் அந்த மன்னருக்கு புரிஞ்சது.
இவர் எந்த அளவுக்கு புத்திசாலின்னு தெரிஞ்சுக்குறாரு மன்னர். இப்படி ஒரு வரலாறும் இந்த சதுரங்க ஆட்டத்திற்கு இருக்கு. இந்தியால கண்டுபிடிச்ச இந்த விளையாட்டு கிபி ஏழாம் நூற்றாண்டில் பெர்சியா போய் அங்க இருந்து மத்த நாடுகளுக்கு பரவி இருக்கு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி இந்தியாவில் கண்டுபிடித்த இந்த விளையாட்டில இந்தியா இப்ப வரைக்கும் தலைசிறந்து விளையாண்டு பல வெற்றிகள குமிச்சிட்டு இருக்கு.