சர்வதேச ஒலிம்பிக் தினம் வருடம் தோறும் ஜூன் 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முதல் முறை ஒலிம்பிக் தினம் 1948-ல் அனுசரிக்கப்பட்டது. நான்கு வருடத்திற்கு ஒரு முறை மிக பெரிய அளவில் மிக பிரம்மாண்டமாய் உலக அளவில் பல விளையாட்டுகளை நிகழ்த்துவது ஒலிம்பிக் ஆகும்.
உலகமுழுவதும் ஆயிரக்கணக்கான விளையாட்டுகள், விளையாட்டு வீரர்கள் வீராங்கனை இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பார்கள். ஒலிம்பிக் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், பரப்புவதற்கும், மேலும் அதிகமான மக்களை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கவும் ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது.
ஓட்டங்கள், இசை, கண்காட்சிகள், பல்வேறு விளையாட்டுகள் கல்வி கருத்தரங்குகள் போன்ற விளையாட்டு நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். பாலினம், வயது, சமூகப் பின்னணி போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் பங்கேற்பதை தேசிய ஒலிம்பிக் கமிட்டி ஊக்குவிக்கிறது.
இதுவரை நடந்துள்ள ஒலிம்பிக் (1896-2018) போட்டிகளில், குளிர்கால மற்றும் கோடைகால ஒலிம்பிக் பதக்கங்களை சேர்த்து மொத்தம் 2,827 பதக்கங்களை குவித்துள்ளது அமெரிக்க நாடு. 1928 வருடத்தில் இருந்து இந்தியா எல்லா போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. இதுவரை மொத்தம் 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது. 10 தங்கப் பதக்கங்களும் 9 வெள்ளி பதக்கங்களும், 16 வெண்கலப் பதக்கங்களும் பெற்றுள்ளது நம் இந்திய நாடு.
ஒலிம்பிக்கில் 1900 வருடம் நடந்த போட்டியில் “நார்மன் பிரிச்சர்ட்” என்னும் பிரிட்டிஷ் இந்திய வீரர், நம் இந்திய நாட்டிற்காக இரு வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளார். அதிக முறை இந்தியாவிற்காக பதக்கம் வென்ற வீரர்கள் நார்மன் பிரிச்சர்ட் , சுஷில் குமார் , பி.வி.சிந்து ஆகியோர் இருமுறை வென்றுள்ளனர். இந்த வருட ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நாட்டில் தொடங்குகிறது, 26 ஜூலை-யில் தொடங்கி 11 ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும்.