காசு சேமிக்கிறதுக்கும்…யோகா பண்ணுறதுக்கும் என்ன சம்மந்தம்ன்னு யோசிக்கிறீங்களா.???
ரொம்ப சிம்பிள்… டெய்லி யோகா பண்ணுன்னா? மன அமைதி கிடைக்கும்…. நிதானம் கிடைக்கும்… அதுலயும் யோகாவுல சொல்ற மாதிரி பயிற்சி பண்ணிங்கனா… வீட்ல உங்க Wife திட்டுன்னாலும்… உங்க Husband திட்டுனாலும்… பொறுமையா டீல் பண்ணுவீங்க…. காரணம் யாரு??? எல்லாம் யோகா பண்ணுறதால வர்ற யோகம்தான்…
அட இவ்ளோ ஏங்க… ஆபீஸ்ல நீங்க பாத்த வேலைக்கு, பார்க்காதா வேலைக்கு அண்டா அண்டாவ உங்க பாஸ் உங்கள திட்டுனாலும் நீங்க Shinchan ஸ்டைல்ல “அமைதி அமைதி… அமைதிகெல்லாம் அமைதின்னு…” போயிருவீங்க… இப்படி அமைதியா… பொறுமையா… இருந்தா என்ன ஆகும்?
ரத்தக்கொதிப்பு ,டென்ஷன் சகலவிதமான உடல் உபாதைகளும் உங்க ஏரியா பக்கமே எட்டி பாக்காது… இப்படி எந்தவிதமான பக்கவிளைவும் இல்லாத ஆரோக்கியமான உடல் இருந்தா நோய் அண்டாது… ஹாஸ்பிடல் போக வேணாம்… ஹெல்தியா இருந்தா மருந்து மாத்திரைக்கு காசு செலவு பண்ண வேண்டாம்… நிறைய காசு மிச்சம் பண்ணலாம்… ஆக… நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்…
முக்கியமான விஷயம் : யோகாவ முறையா கத்துகிட்டவங்க கிட்ட போய் கத்துக்கோங்க… இஷ்டத்துக்கு ஆன்லைன் பார்த்து யோகா பண்ணா அதுவே பெரிய குஷ்டமாகும்… ஐ மின் கஷ்டமாகும்…!!! ஹாப்பி யோகா டே… சர்வதேச யோகா நாளுக்கு மட்டுமில்லாம எல்லா நாளும் யோகா பண்ணா உங்க வாழ்க்கையே யோகமாகும்…