ஒவ்வொரு திரைப்பட கலைஞனுக்கும் ஆஸ்கார் விருதை கையில் ஏந்துவதே கனவு… எல்லா புகழும் இறைவனுக்கே என ஆஸ்கரை கையில் ஏந்திய இசைப்புயல் போல என்றாவது ஒரு நாள் ஆஸ்கார் கனவு நிறைவேறும் என பல கலைஞர்கள் தரமான திரைப்படங்களை தந்து வருகின்றனர். அந்த கனவின் பலனாக ஜல்லிக்கட்டு திரைப்படம் வந்துள்ளது

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சார்பாக ஒரு திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்படும். அந்த பிரிவில் அந்த படம் போட்டிக்கு தகுயானது இல்லை என்றால் ஆஸ்கர் குழுவினால் நிராகரிக்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 93வது அகாடமி விருதுகளுக்கு Best International Feature Film category – ல் Lijo Jose Pellissery இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் பரிந்துரையை ஆஸ்கர் குழு ஏற்று கொண்டுள்ளது.
தமிழரின் பெருமை சொல்லும் தலைப்பையும், மக்களின் மனிதாபிமானம் நிறைந்த கதையம்சம் கொண்ட ஜல்லிக்கட்டு திரைப்படம் சினிமா ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தை பல பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்கள் மூலம் பாராட்டி வருகின்றனர் ..
2001-ம் ஆண்டு லகான் திரைப்படத்திற்கு பிறகு இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருது போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை இத்திரைப்படம் பெற்றுள்ளது.
இதுவரை இந்தியாவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட திரைப்படங்களில் ஜல்லிக்கட்டு நான்காவது திரைப்படம் என்ற அந்தஸ்தையும், முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது.

1957-ம் ஆண்டு Mother India, 1988-ம் ஆண்டு Salaam Bombay, 2001-ம் ஆண்டு Lagaan திரைப்படங்களை தொடர்ந்து 2021-ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகளுக்கான போட்டியில் கலந்துகொண்டுள்ளது ஜல்லிக்கட்டு திரைப்படம்.
1969-ல் தெய்வமகன், 1987-ல் நாயகன், 1990-ல் அஞ்சலி, 1992-ல் தேவர் மகன், 1995-ல் குருதிப்புனல், 1996-ல் இந்தியன், 1998-ல் ஜீன்ஸ், 2000-ல் ஹேராம், 2016-ல் விசாரணை ஆகிய 9 படங்கள் இதுவரை இந்தியாவின் சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 5 உலகநாயகன் கமலஹாசனின் திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

இந்தியாவின் சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு திரைப்படத்திற்கும் அதற்காக உழைத்த கலைஞர்களுக்கும் Suryan FM சார்பாகவும் தமிழர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்.