Jasprit Bumrah – நேற்று (டிசம்பர் 9, 2025) கட்டாக்கில் உள்ள பரபாதி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த முதலாவது T20 சர்வதேசப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரேவிஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் , T20 சர்வதேசப் போட்டிகளில் தனது 100-வது விக்கெட்டை பூர்த்தி செய்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா.
இந்த விக்கெட்டின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களான டெஸ்ட் (Test), ஒருநாள் (ODI), மற்றும் T20 ஆகிய அனைத்திலும் தலா 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இவர் டெஸ்ட் போட்டிகளில் 234 விக்கெட்டுகளையும் ஒருநாளில் (ODI)149 விக்கெட்டுகளையும் T20I போட்டிகளில் 101 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் (நேற்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்கள் உட்பட) , சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் 100 விக்கெட்க்கு மேல் எடுத்த என்ற அரிய சாதனையைப் படைத்த உலகின் ஐந்தாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றுள்ளார் . இதற்கு முன், லசித் மலிங்கா (இலங்கை), ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்), டிம் சவுத்தி (நியூசிலாந்து), ஷாஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்) ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் 100 விக்கெட்க்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.
தற்போது மொத்தம் 484 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா, மிகக் குறைவான போட்டிகளிலேயே மீதமுள்ள 16 விக்கெட்டுகளை வீழ்த்தி, விரைவில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நேற்று நடைபெற்ற முதலாவது T20I போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Article by – சதீஸ்குமார் மனோகரன்

