காலம் கலிகாலம் ஆகிப்போச்சு…. கலி காலம் என்றால் என்ன?
சதுர் யுகங்களில் நான்காவது யுகம் கலியுகம். அதாவது ,
நாம் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய இந்த யுகம் கலியுகம் ஆகும்.
இந்த யுகத்திலே அறம் குறையும், அதர்மம் அதிகரிக்கும்.
பிறர் நலம் பார்க்கும் நல் உள்ளங்கள் எண்ணிக்கை குறையும்.
சுயநலம் அதிகரிக்கும். இது குறித்து விஷ்ணு புராணம் நூல்களில் தெளிவாக நாம் தெரிந்து கொள்ளலாம். கலி என்றால் இருட்டானது என்று பொருள்.
களி இருக்கும் இடங்களாக சில இடங்களை குறிப்பிடுகின்றனர். சூதாடும் இடம், மது பருகும் இடம்,
பெண்கள் அவமானப்படுத்தப்படும் இடம்,
பிராணிகளை வதை செய்யும் இடம்,
பொய் சொல்லும் இடம்,
ஆணவம் நிறைந்த இடம்,
பேராசை நிறைந்த இடம்,
கோபம் உள்ள இடம்,
பகை உள்ள இடம், என்று வரிசையாக கலிபுருஷன் இருக்கும் இடங்களை சொல்கின்றன..
Article By – RJ Vigithra

