Cinema News Stories

கர்ணன் Teaser இதோ !!!

தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘கர்ணன்’ திரைப்படத்தின் டீஸர் YouTube-ல் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த டீஸர் வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் YouTube-ன் டிரெண்டிங் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது .

ஏற்கனவே கர்ணன் திரைப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று சூப்பர்ஹிட் பாடல்களாக வலம் வருகிறது. கர்ணன் திரைப்படத்தை குறித்த முதல் அறிவிப்பு வந்ததிலிருந்தே, இப்படத்தின் மீது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட தொடங்கிவிட்டது. ‘பரியேறும் பெருமாள்’ புகழ் மாரி செல்வராஜ் அவர்களின் திரையுலக வாழ்க்கையில் கர்ணன் ஒரு முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கர்ணன் டீஸர்-ல் வரும் அனைத்து காட்சிகளும் படத்தை விரைவில் திரையில் காண வேண்டும் என்ற விறுவிறுப்பை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. சந்தோஷ் நாராயணின் இசை பாடல்களில் மட்டுமின்றி டீஸரிலும் நம்மை கவர்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் அமைந்த Frame-கள் அனைத்தும் இந்த டீஸருக்கு உயிரூட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

இந்த வீடியோவில் தனுஷின் Entry பார்ப்பவர்களுக்கு Goosebumps ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். குதிரை மீது தனுஷ் பயணம் செய்வது போன்ற காட்சிகள் டீஸரில் இடம்பெற்றிருக்கும். மகாபாரத இதிகாசத்தில் உள்ள ‘கர்ணன்’ கதாப்பாத்திரத்திற்கும் தனுஷின் ‘கர்ணன்’ கதாபாத்திரத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்போதிலிருந்தே சமூக வலைதங்களில் கர்ணன் திருவிழா தொடங்கிவிட்டது. கர்ணன் திரைப்படத்தின் டீஸர்-ஐ கீழே காணுங்கள்.

Tags

About the author

alex lew