Cinema News Stories

கார்த்தி படங்களுக்கு எகிறும் எதிர்பார்ப்பு… அடுத்தடுத்து உருவாகும் 4 படங்கள் என்ன தெரியுமா?

Actor Karthi’s Upcoming Movies: Kaithi 2, Hit 4, Sardar 2 & More
Actor Karthi’s Upcoming Movies: Kaithi 2, Hit 4, Sardar 2 & More

Karthi Upcoming Movies – கார்த்தி படங்களுக்கு எகிறும் எதிர்பார்ப்பு… அடுத்தடுத்து உருவாகும் 4 படங்கள் என்ன தெரியுமா? – முழு தகவல்கள் இதோ. நடிகர் கார்த்தி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான மெய்யழகன் படத்தினை தொடர்ந்து இவர் கங்குவா மற்றும் ஹிட் 3 படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்து பலர் மத்தியில் பேசப்பட்டார். தற்போது இவர் அடுத்தடுத்து நடிக்கும் 4 படங்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இதோ.


கார்த்தி

கார்த்தி – தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இவரின் ஒவ்வொரு படங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு பெறுக காரணமே இவர் தேர்ந்தேடுத்து நடிக்கும் சுவாரஸ்ய கதைக்களம் தான் காரணம்.

Actor Karthi’s Upcoming Movies: Kaithi 2, Hit 4, Sardar 2 & More
Actor Karthi’s Upcoming Movies: Kaithi 2, Hit 4, Sardar 2 & More

மெய்யழகன்

கார்த்தி திரைப்பயணத்தில் இவர் நடித்துள்ள இறுதி படமானது ‘மெய்யழகன்’ திரைப்படம் தான். இப்படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டுள்ளது. சாதாரண திரைக்கதையாக இருந்தாலும் திரைக்கதையாகவும் படமாக்கிய விதத்திலும் இப்படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. மெய்யழகன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி ஹிட் 3 மற்றும் கங்குவா படத்தில் முக்கிய கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Actor Karthi’s Upcoming Movies: Kaithi 2, Hit 4, Sardar 2 & More
Actor Karthi’s Upcoming Movies: Kaithi 2, Hit 4, Sardar 2 & More

சர்தார் 2

2022-ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த ‘சர்தார்’ திரைப்படத்தின் தொடர் கதையாக உருவாகும் திரைப்படம், சர்தார் 2. கார்த்தி திரைப்பயணத்தில் 100 கோடி வசூல் செய்துள்ள படங்களில் சர்தார் திரைப்படமும் ஒன்று. சர்தார் 2 படத்தில் கார்த்தி-யுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ராஜிஷா விஜயன், ராசி கண்ணா என பலர் நடித்துள்ளனர். இப்படம் 2025 இரண்டாம் பாதியில் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Actor Karthi’s Upcoming Movies: Kaithi 2, Hit 4, Sardar 2 & More
Actor Karthi’s Upcoming Movies: Kaithi 2, Hit 4, Sardar 2 & More

வா வாத்தியார்

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கி பிரபலமானவர் தான், இயக்குனர் நலன் குமாரசாமி. தற்போது இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் திரைப்படம் தான் ‘வா வாத்தியார்’. இப்படத்தில் கார்த்தி-யுடன் இணைந்து க்ரித்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படம் 2025 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Karthi’s Upcoming Movies: Kaithi 2, Hit 4, Sardar 2 & More
Actor Karthi’s Upcoming Movies: Kaithi 2, Hit 4, Sardar 2 & More

ஹிட் – 4th கேஸ்

பிரபல தெலுங்கு சினிமா இயக்குனர் ‘சைலேஷ் கொலனு’ இயக்கத்தில் ஹிட் திரைப்பட வரிசையில் உருவாகும் நான்காவது பாக திரைப்படமாகும். இப்படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவுப்பு ஹிட் 3 படத்தின் இறுதியில் படக்குழு அறிவித்துள்ளது.

Actor Karthi’s Upcoming Movies: Kaithi 2, Hit 4, Sardar 2 & More
Actor Karthi’s Upcoming Movies: Kaithi 2, Hit 4, Sardar 2 & More

கைதி 2

2019-ஆம் ஆண்டு வெளியாகி பிரமாண்ட ஹிட் அடித்த திரைப்படம், கைதி. இப்படத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் திரைக்கதை தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக அமைந்து கைதி படத்தினை மாபெரும் வெற்றி படமாக மாற்றியுள்ளனர் ரசிகர்கள். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி பட கதையை மையமாக கொண்டு LCU என்ற புதிய முயற்சியை எடுத்துள்ளார். அதனால் இப்படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எகிறி உள்ளது. இப்படத்தில் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என இப்பட இயக்குனர் எஸ் ஆர் பிரபு கூறியுள்ளார்.

Article by Sakthi Harinath

About the author

Sakthi Harinath