Cinema News Specials Stories

KGF 2-ன் அதீரா !!!

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கே.ஜி.ஃப் இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரத்தின் அதீரா போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் டிரெண்ட் ஆக தொடங்கிவிட்டது.

கே.ஜி.எஃப் திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி அடைந்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. இப்படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் இப்படத்தில் சஞ்சய் தத் நடிக்கின்றார் என அறிவிப்பு வந்த பொழுதே அவரது கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கும், அந்த கதாபாத்திரத்தின் பெயர் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் ஏற்படத் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட போஸ்டரில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்தின் பெயரும் வெளியிடப்பட்டது. இப்படத்தில் “அதீரா” எனும் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார். இந்த போஸ்டரில் வித்தியாசமான தோற்றத்தில் சஞ்சய் தத் இருக்கிறார். கையில் ஒரு வாள், இரும்பினால் ஆன உடை, வெள்ளை தாடி, முகத்தில் பச்சை குற்றி இருப்பது என பார்ப்பதற்கே வித்தியாசமான படைவீரன் போன்ற தோற்றத்தில் சஞ்சய் தத்தின் அதீரா கதாபாத்திரம் இந்த போஸ்டரில் காண்பிக்கப்பட்டுள்ளது. சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் குறித்த வெளியீட்டு பதிவை கீழே காணுங்கள்.

இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த போஸ்டரை இணையத்தில் ஷேர் செய்து சஞ்சய் தத்துக்கு அவர்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கே.ஜி.எஃப் திரைப்படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் அவர்களே இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஞ்சய் தத்தின் பிறந்தநாள் வாழ்த்துக்களையும், கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பையும் ரசிகர்கள் #KGFChapter2 #AdheeraFirstLook #Adheera #HappyBirthdaySanjayDutt #KGFChapter2Update என இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் வசூல் ரீதியாக புதிய சாதனைகளை இந்திய சினிமாவில் படைக்கும் என சினிமா வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.