கோலிவுட் வரலாற்றில் பல குழந்தை நட்சத்திரங்களை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம் . அந்த வரிசையில் தளபதி விஜயும் 6 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் . அந்த ஆறு படங்களையும் இயக்கியது விஜயின் தந்தை S.A .சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது .
விஜய் தனது 10 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிவிட்டார் .1984 ஆம் ஆண்டு புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் வெற்றி திரைப்படத்தில் தான் முதன் முதலில் விஜய் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார் .

அதைத் தொடர்ந்து அதே வருடம் வெளிவந்த குடும்பம் திரைப்படத்திலும் நடித்தார் . விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த 6 படங்களில் 4 படத்திற்கு விஜயகாந்த் தான் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது . விஜயகாந்தின் வெற்றி , குடும்பம் , வசந்த ராகம் மற்றும் சட்டம் ஒரு விளையாட்டு படங்களில் விஜய் நடித்துள்ளார் .
இதைத்தவிர நடிகர் ராம்கியின் இது எங்கள் நீதி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நான் சிகப்பு மனிதன் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக தளபதி விஜய் நடித்துள்ளார் . 1984 முதல் 1988 வரை குழந்தை நட்சத்திரமாக திரையில் வளம் வந்த விஜய் 1992 ஆம் ஆண்டு முதன் முதலில் நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் .

ஆரம்ப காலங்களில் விஜய் தோல்விகளையும் அவமானங்களையும் மட்டுமே நிறைய சந்தித்துள்ளார் . 1996 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமனின் பூவே உனக்காக திரைப்படம் தான் விஜயின் திரையுலக வாழ்க்கையில் முதல் திருப்புமுனையாக அமைந்த வெற்றிப்படம் .
அதைத் தொடர்ந்து காதலுக்கு மரியாதை , துள்ளாத மனமும் துள்ளும் , மின்சார கண்ணா போன்ற படங்களின் மூலம் மக்கள் மனம் விரும்பும் கதாநாயகனாக விஜய் மாறினார் . 2003 வரை பல வெற்றி படங்களை கொடுத்த விஜயை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது திருமலை திரைப்படம் . அதை தொடர்ந்து கில்லி , மதுர , திருப்பாச்சி என பல ஆக்ஷன் படங்களில் நடித்தார் .

இதுவரை வெளிவந்த 63 விஜய் படங்களில் 7 படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் பிகில் படத்தை தொடர்ந்து கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படமாக்கப்பட்டு வருகிறது . சோதனைகளும் வேதனைகளையும் கடந்தால் தான் சாதனைகள் கைக்கூடும் என்பதற்கு விஜய் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
Add Comment