மக்கள் கொண்டாடும் பல கதாநாயகர்களை தமிழ் சினிமா நமக்கு கொடுத்துள்ளது , ஆனால் அவர்களுக்கு இணையான ஒரு கதாநாயகியாக நம் மனதில் LADY SUPERSTAR நயன்தாரா நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாகியாக இருப்பது நயன்தாராவிற்கு பெருமை என்று சொல்வதை விட, இப்படிப்பட்ட ஒரு அழகிய திறமைசாலி கிடைத்திருப்பது தமிழ் சினிமாவிற்கு தான் பெருமை என்று சொல்வதே சரியாக இருக்கும்.
நயன்தாராவை LADY SUPERSTAR ஆக மக்கள் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் உண்டு.

இதுவரை நான்கு மொழிகளில், ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நயன்தாரா சுமார் 45 விருதுகளை தன்வசப்படுத்தி தான் ஒரு கலையின் களஞ்சியம் என்பதை நிரூபித்துள்ளார்.
2003 முதல் 2010 ஆம் ஆண்டு வரை மட்டுமே 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த நயன்தாரா , 2011 ஆம் ஆண்டு நடித்த ஒரே படம் ஸ்ரீ ராம ராஜ்யம் . ஒரு ஆண்டில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்த போதிலும் அப்படத்திற்காக 8 விருதுகளை பெற்று தான் ஒரு சிறந்த நடிகை என்பதை திரை உலகிற்கு உரக்கச்சொன்னார்.

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு வரவேற்பு குறைவு என்ற கருத்தை தான் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களைக் கொண்டும் தன் துணிச்சலான நடிப்பைக் கொண்டும் தகர்த்து எறிந்தார்.
இன்றைய காலக்கட்டத்தில் தல-தளபதியுடன் ஒரு படம் நடித்தால் போதும் என்று பல கதாநாயகிகள் தவமாய் தவமிருக்கும் நிலையில் இவர்களுடன் இணைந்து 6 படங்களில் நயன்தாரா நடித்துள்ளார்.

2011ல் வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்யம் தான் நயன்தாராவின் கடைசி படம் என்றும் இதற்க்கு மேல் நயன்தாரா நடிக்கவே மாட்டார் என்றும் பலர் கூறிவந்த நிலையில் அதை பொய்யாகும் விதமாக அப்படத்திற்கு பிறகு 30ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் LADY SUPERSTAR ஆக நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
ஒரு கதாநாயகருக்காக தியேட்டருக்குச் சென்று படம் பார்த்து வந்த ரசிகர்களை, கதாநாயகிக்காகவும் தியேட்டருக்கு செல்ல வைத்த பெருமை நயன்தாராவையே சேரும்.

நயன்தாரா பல தடைகளையும் சோதனைகளையும் கடந்து திரைத்துறையில் வெற்றி வாகை சூடி சாதிக்கத்துடிக்கும் பலருக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறார். தற்போது நயன்தாரா, Superstar ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்துள்ளார், இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரித்திரம் படைக்கும் இந்த சிங்கப்பெண்ணின் சாதனைகள் மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.
Add Comment