இந்த கட்டுரையானது ஹரிணி மற்றும் பாடலாசிரியர் விவேக் அவர்களின் உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டுள்ளது.
இன்றைய தமிழ் சினிமாவில் விவேக் அவர்களின் வளர்ச்சியை கண்டு நாங்கள் பெருமைப்படுகிறோம், உங்கள் வளர்ச்சியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
“நன்றி, உண்மையில் எனக்கு பயமாக தான் இருக்கிறது. கொடுத்த வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும் என்ற பொறுப்பும் பயமும் என்னுள் எப்போதுமே இருக்கும்.”
இன்றைய Trend-ற்கு ஏற்ற பாடல்களை கொடுப்பதுடன் நீங்கள் ஒரு Trend Setter ஆகவும் இருப்பதை பற்றி கூறுங்கள்?
” வெறித்தனம் போன்ற பாடல்களில் Trend ஆக இருக்கும் வார்த்தைகளை உபயோகித்து வரிகளை உருவாக்கியிருப்பேன். அனால் ஒரு சில பாடல்களில், இனிவரும் பாடலாசிரியர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டி பாடல்களை எழுதுவேன்.”
2019 விவேக்கிற்கு எப்படிப்பட்ட ஆண்டாக அமைந்தது?
” எனக்கு திருப்தியான ஆண்டாக அமைந்தது. வெவ்வேறு தளங்களில் வேலை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஒரு கலைஞனாக இருப்பவருக்கு அது தான் முக்கியம்.”
தர்பாரும் தலைவரும்

தர்பார் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது, இப்படத்தில் சூப்பர்ஸ்டாருடன் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூறுங்கள்?
” மற்றவர்களை பாராட்டுவதை தனக்குள் தேக்கி வைக்காமல் உண்மையான மனதுடன் பாராட்டுவார். எனக்கு அவர் தொலைபேசியில் பாராட்டுக்கள் தெரிவித்ததை என்னால் மறக்கவே முடியாது. “
சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களையும் Motivation பாடல்களையும் பிரித்து வைக்கவே முடியாது. அவ்வகையில் நீங்கள் அவருக்காக எழுதிய Motivation பாடல்கள் பற்றி கூறுங்கள்?
” நான் அவருக்காக எழுதியதில் உள்ளாலா பாடல் மட்டும் தான் Motivation வகையில் இருக்கும், மற்ற பாடல்கள் ரசிகர்களை திருப்தி படுத்தும் எண்ணத்தில் எழுதப்பட்டது தான். வாய்ப்புகள் கிடைத்தால் அவருக்கு நிறைய பாடல்கள் எழுத ஆசைப்படுகிறேன்.”
வளர்ந்து வரும் பாடலாசிரியர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
” ஒவ்வொருவரும் அவர்களுக்கு உரிய வார்த்தைகளை வைத்து தான் பாடல்களை செதுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.”
பட்டாஸ் திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதிய அனுபத்தை பற்றி கூறுங்கள்?
” தனுஷ் அவர்களின் நடிப்பை பார்த்து வியந்தவர்களுள் நானும் ஒருவன். இதற்கு முன் துரை செந்தில்குமார் – தனுஷ் கூட்டணியில் வெளிவந்த கொடி திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளேன்.
அவர்களுடன் மீண்டும் சேர்ந்து பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு தேவையான சுதந்திரத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் எனக்கு வழங்கினார்.”
இந்த பிரபலங்களை பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்?
விஜய் சேதுபதி – அண்ணன்
அனிருத் – மனிதம்
தனுஷ் – தற்போதைய நடிப்பின் இலக்கணம்
அட்லீ – ஆத்மார்த்தமான நட்பு
விஜய் – அன்பு
ரஜினி – வேகம்

2020 எப்படிப்பட்ட ஆண்டாக உங்களுக்கு இருக்க வேண்டும்?
” படங்கள் நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. நான் எனது எதிர்பார்ப்புகளை எப்போதும் குறைந்த அளவில் தான் வைத்திருப்பேன்.”
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி சொல்லுங்கள்?
” நான் பொதுவாக எந்த ஒரு கலைஞனையும் கடவுள் ஸ்தானத்தில் வைத்துப்பார்க்க மாட்டேன். ஆனால் என்னை மீறி இசைப்புயல் அவர்களை கடவுளுக்கு இணையான ஒரு கலைஞனாக நான் பார்த்தேன்.”
முழு நேர்காணலை கீழே கண்டு மகிழுங்கள்: