Mamitha Baiju: ஒரு நேரத்தில் 4 டாப் நடிகர் தமிழ் படங்களில் நடிக்கும் மமிதா பைஜு – பிரேமலு என்னும் மலையாள திரைப்படம் மூலம் பிரபலமானவர், மமிதா பைஜு. இவர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர் தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது இவர் நடிக்கும் தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் பற்றிய முழு தகவல்கள் இதோ.
ஜன நாயகன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் டாப் நடிகரான விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படத்தில் நடிகை மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் விஜய்க்கு மகள் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் தெலுங்கு திரைப்படமான ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என தகவல்கள் வெளியாகி உள்ளது, ஆனால் படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இரண்டு வானம்

முண்டாசுப்பட்டி, ராட்சசன் திரைப்படத்தின் வெற்றி கூட்டணி விஷ்ணு விஷால் – ராம் குமார் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம், இரண்டு வானம். இப்படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் இப்படம் குறித்த வெளியீட்டு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா 46

சூர்யா 46 – தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம். இப்படத்தில் சூர்யா & மமிதா பைஜு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாத்தி, லக்கி பாஸ்கர் திரைப்பட புகழ் இயக்குனர் இப்படத்தினை இயக்கவுள்ளார்.
டியூட்

டியூட் – அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

