நம்ம பொறந்ததுல இருந்து எப்பவுமே நம்ம கூட ஒரு அங்கமா இருக்குறதுல ஒன்னு நிலா தாங்க. ஆமா நிலாவ காமிச்சு சாப்பாடு ஊட்டினதுல இருந்து ஸ்கூல் rhymes ல நிலா நிலா ஓடி வானு பாடி, நிலாவை வச்சு கவிதை எழுதுற வரைக்கும் நிலா நம்ம வாழ்க்கை பயணத்தின் ஒரு அங்கமாவே இருக்கு.
அப்படிப்பட்ட நிலவுக்கு ஒரு சிறப்பு நாள் இருக்குறது உங்களுக்கு தெரியுமா? அதுதான் சர்வதேச நிலா தினம். ஒவ்வொரு வருடமும் ஜூலை 20ஆம் தேதி சர்வதேச நிலா தினமா கொண்டாடப்படுது . 2021 ஆம் வருஷம் டிசம்பர் 9 ஆம் தேதி ஐ. நா ஒவ்வொரு வருடமும் ஜூலை 20 ஆம் தேதிய நிலா தினமா கொண்டாடணும்னு அறிவிச்சாங்க.
ஜூலை 20 ஆம் தேதி நீல் மற்றும் ஆல்ட்ரின் நிலவில் கால் வச்ச தினம், அதான் அந்த நாள ஒரு மனதா எல்லாரும் தேர்ந்து எடுத்துருக்காங்க. நிலாவுல பாட்டி வட சுட்டுட்டு இருக்க கதைகளை தாண்டி நிலவுல மனிதர்கள் கால் பதிச்சு ஆராய்ஞ்சு அங்க என்ன இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க .
இந்த கண்டுபிடிப்புகள் இன்னும் தொடரணும்ங்கற காரணத்துக்காக தான் இந்த நிலா நாள் அனுசரிக்கப்படுது. இது எல்லாத்தையும் தாண்டி நிலாவ ஆராய்ச்சி பண்ண பெருமை நம்ம இந்தியர்களுக்குத்தான் அதிகம் . அதுக்கு சான்றா சந்திரயான் 1 மற்றும் 3 திட்டங்களை சொல்லலாம் . இது நிலால நீர் படிமங்கள் இருக்கறத கண்டுபிடிக்குறதுல ஆரம்பிச்சு நிலவுல குகைகள் இருக்கிறது வரைக்கும் கண்டுபிடிக்க ஆதாரமா அமைஞ்சது .
சரி கொஞ்சம் வித்தியாசமா நிலா பத்தியும் நிலா பிடித்தவர்கள் பத்தியும் தெரிஞ்சுக்கலாமா?
1 . நிலவ ரசிக்குறவங்களுக்கும் நிலவு பிரியர்களுக்கும் ஆங்கிலத்துல selenophile ன்னு பேரு .
- உலகம் முழுக்க இருக்குற நிலவு ரசிகர்கள் நிலவுல இருந்துதான் தங்களுக்கு எனர்ஜி கிடைக்கிறதா நம்புவாங்களாம்.
- நிலா என்னதான் வெள்ளையா தெரிஞ்சாலும் அது பாக்குறதுக்கு டார்க்காதான் இருக்குமாம், அதுக்கு காரணம் நிலா சூரியன் கிட்ட இருந்து தான் ஒளிய வாங்கிக்குது.
- நிலவுல நிறைய உயரமான மலைகள் இருக்காம், அதுல இருக்க சிகரங்கள் mount everest அ விட உயரமானதாம் .
- நம்ம பூமில இருந்து பாக்குறதுக்கு நிலவும் சூரியனும் ஒரே சைஸ்ல இருக்குற மாதிரி தோணும் அனா நிலவு சூரியனை விட 400 மடங்கு சின்னதாம்.
- நம்ம பூமில ஈர்ப்பு விசை இருக்குற மாதிரி நிலவுக்கும் ஈர்ப்பு விசை இருக்காம், ஆனா அது பூமியை விட ரொம்ப கம்மியாம்.
இப்படி நம்ம எல்லாருமே ரசிக்கிற மாதிரி பல விஷயங்கள் நிலாவ பத்தி இருக்கு. அது மட்டும் இல்ல நிலாவ கடவுளா கும்பிடறது , நிலவு ஒளியில நின்னா குழந்தை பிறக்கும், நிலவுல வேற்று மனிதர்கள் இருக்காங்க, நிலாவை பாம்பு முழுங்கும் இப்படி பல நம்பிக்கைகள் அந்த காலம் தொட்டே நம்ம நாட்லயும் சரி வெளி நாடுகள்லயும் சரி மக்கள் மத்தில இருந்துட்டு வருது .
எது எப்படியோ நிலாவ பற்றின எத்தனை ஆராய்ச்சிகள் நடந்தாலும் அத பற்றின கதைகளும் சுவாரஸ்யங்களும் மக்கள் மத்தில குறையாது . நிலா அது வானத்து மேலன்னு ஒரு பாட்டு பாடிட்டு நிலாவை பார்த்து ரிலாக்ஸ் பண்ணிட்டு லைப் அ என்ஜோய் பண்ணுங்க.