Mother Language Day 2025: சர்வதேச தாய்மொழி தினமான 2025 இல், நம் தாய்மொழியான தமிழின் அழகையும் செழுமையையும் கொண்டாடுவோம்! அதன் கலாச்சார பாரம்பரியத்தையும் மொழியியல் பெருமையையும் ஆராயுங்கள்.
சர்வதேச தாய்மொழி தினம் என்பது மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகும். தமிழ் பேசுபவர்களுக்கு, இது உலகின் பழமையான மற்றும் மிகவும் செம்மொழியான மொழிகளில் ஒன்றைக் கௌரவிப்பதில் ஒரு பெருமையான தருணம். தமிழ், அதன் வளமான இலக்கியம், வரலாறு மற்றும் ஆழமான வேரூன்றிய மரபுகளுக்கு பெயர் பெற்றது, தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து செழித்து வருகிறது. இந்தச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் நம் தாய்மொழியை அரவணைத்து போற்றுவோம்!
தாய் மொழி! என் தமிழ் மொழி!
ஒவ்வொரு மொழியும் தனித்துவமான சிறப்ப கொண்டுருக்கு. ஒருத்தருடைய மொழி அவரோட அடையாளமா இருக்கு, ஒரு பாரம்பரியத்தோட பிரதிபலிப்பா இருக்கு. அதையும் தாண்டி, ஒரு புதிய மனிதரை சந்திக்கும் போது அவரை நாம எளிதுல நம்மளில் ஒருவரா ஏத்துக்கணும்னா, குறைந்த பட்சம்… தங்களுடைய தாய் மொழியை கத்துக்க முயற்சி செய்பவராவோ, அரைகுறையாகவாவது பேச தெரிஞ்சவராவோ இருந்தாலே போதுமானது. இப்படியாக இந்த உலகத்துல மொழிக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கு.
நம்முடைய தாய் மொழி பிறந்த உடனே கேட்கக்கூடிய முதல் மொழி, ஒரு குழந்தை பேசத்தொடங்கும் போது தன்னுடைய முதல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மொழி. அதனால் தானோ என்னவோ தாய் மொழி மீது தீரா காதலும், சில நேரங்களில் மற்ற மொழிகள் மீது வெறுப்பும் உண்டாகிறது. அப்படி இல்லாமல் ஒவ்வொரு மொழியையும் அறிவின் அடித்தளமாகவும், தன்னுடைய தாய் மொழி தனக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல் அவரவர்களின் தாய் மொழி அவர்களுக்கு முக்கியம் என்ற சிறிய புரிதல் இருந்தாலே போதுமானது.
ஒரு மொழி வாழும்போது அதனுடைய பண்பாடும், கலையும், இலக்கியமும், இசையும், வரலாறும், பாரம்பரியமும் மொத்தமாக வளர்ச்சி அடைகிறது. குறிப்பாக குழந்தைகள் தங்களுடைய தாய்மொழியில் கல்வி பயின்றால் அவர்களது சிந்தனையும், புரிதல் திறனும், அறிவுத்திறனும் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு தங்களுடைய தாய்மொழியை எழுதவும், படிக்கவும், பேசவும் கற்பிப்பதன் மூலம் நம்முடைய மொழியின் வாயிலாக பிற கலைகளையும் அதன் ஆர்வத்தையும் தூண்டுவது இன்னும் எளிதாகிவிடும்.
ஒரு மரத்துக்கு எப்படி அதனுடைய வேர்கள் முக்கியமோ, ஒரு கட்டிடத்திற்கு எப்படி ஒரு அடித்தளம் முக்கியமோ அதே போல பிரெஞ்சு, ஜெர்மன், கொரியன், சைனீஸ் என்று பல மொழிகள் பேசுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் தமிழ் ஒரு முக்கியமான அடித்தளமாக அமைகிறது. இந்த “உலக தாய்மொழி தினம்” நாம் அனைவரும் தாய்மொழியை சிறப்பித்து, நம்மால் முடிந்த அளவு தொழில்நுட்பத்தில் தமிழை செழிக்க செய்ய வேண்டும்.