“கள்ளூர பார்க்கும் பார்வை உள்ளூர பாயுதே…!” அப்டினு “ராஜ ராஜ சோழன் நான்” பாட்டுல ஒரு வரி வரும், அந்த பாட்டுக்கு அந்த வரி பொருந்துனத விட, நேரம் படத்துல “காதல் என்னுள்” பாட்டுல நஸ்ரியாவுக்கு அவ்வளவு பொருந்தும்…
தனக்கென ஒரு தனி பாணியில் நடித்து, எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டவர் நஸ்ரியா. சும்மாவா சொன்னாங்க expression Queen-னு, நஸ்ரியா ஒரு all time Pan India Crush…11 வயசுல Camera வெளிச்சம் பட ஆரம்பிச்சிருக்கு, ஒரு தொலைக்காட்சிக்காக. பள்ளி மாணவர்களுக்கு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்காங்க, அப்போதைக்கு அவர் தந்தை அலுவல் ரீதியா துபாய்க்கு தன் மொத்த குடும்பத்தோட கேரளாவ விட்டு செல்லவேண்டிய நிலை.

ஆனா நஸ்ரியா கண்டிப்பா வரமாட்டேன்னு சொல்லி Hostel ல தங்கி படிச்சிருக்காங்க. கொஞ்சம் நடிக்கவும் செஞ்சிருக்காங்க. முதல் படமே மம்முக்கா (மம்மூட்டி) கூட தான் , அதற்கு பிறகு வருடங்கள் ஓட ஓட நிறைய தொலைக்காட்சிகள்ல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பிச்சிருக்காங்க. இருந்தாலும் நம்ம தமிழ் ரசிகர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பித்தது “நேரம்” படத்துக்கு அப்புறம் தான்.
நேரம் படத்தில் ஆடம்பரம் இல்லாத அழகு தேவதையாக நம் அகத்தில் பதிந்திருப்பார் நஸி. அவரின் சின்ன சின்ன expression கூட ஒவ்வொருவரையும் கவரும், தமிழ் ரசிகர்களை தமிழ் படம் அன்றி மலையாள திரைப்படங்களையும் காண வைத்த புண்ணியம் நஸ்ரியாவுக்கு தான் சேரும். எந்த ஒரு நஸ்ரியா ரசிகரின் favorite படம் என்றால் இரண்டு படம் சொல்வாங்க, அதுல முக்கியமான திரைப்படம்னா “ஓம் சாந்தி ஒசானா” தான்.
படம் முழுவதுமே கதாநாயகியின் பார்வையிலேயே நகரும் என்பதால் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல், யதார்த்தமாக இருப்பது, பைக் ஓட்டுதல், dad’s little princess ஆக இருப்பது, மனசுக்கு பிடித்த ஹீரோவை கடைசி வரை காதலிப்பது என அவரின் மேனரிசத்தை முயற்சி செய்யாத பெண்கள் குறைவு. இன்னும் சொல்லப்போனால் நஸி ஃபேன்ஸின் next favorite ஆன “பெங்களூரு டேஸ்” ஆண்களை காட்டிலும் பெண்களையும் ரசிகர்களாக்கியது. அந்தப் படத்திற்குப் பிறகு அதில் நாயகனாக நடித்த பகத் பாசிலுடன் நஸ்ரியா காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார்.
அப்பொழுது அவருக்கு 20 வயது கூட ஆகியிருக்கவில்லை, அதற்கு பிறகு அவ்வப்போது திரையில் தலை காட்டினாலும் அந்த சீசன் நஸ்ரியா திரும்ப வர வேண்டும் என்பது தான் எல்லோருடைய அவா..! இருந்தாலும் அது வரை நஸ்ரியா ஏற்படுத்திய தாக்கமே நம் தலைமுறைக்கும் தாங்கும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நஸ்ரியா.