இந்த கட்டுரையானது ஹரிணி, நடிகை வாணி போஜன் மற்றும் ‘ஓ மை கடவுளே‘ இயக்குனர் அஸ்வந்த் இவர்களின் வீடியோ உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது.
எப்படி இந்த கதை அமைந்தது?
அஸ்வந்த்: அணைத்து கதைகளுமே ஒரு கேள்வியில் இருந்து தான் தொடங்குகிறது. கல்யாணம் என்பது சொர்க்கத்தில் முடிவாகும் என்று கூறுவார்கள், ஆனால் ஏன் இத்தனை Divorce நடக்கிறது என்கிற கேள்வி எனக்குள் தோன்றியது. அது தான் இக்கதையின் தொடக்கப்புள்ளி.
‘ஓ மை கடவுளே‘-னு எப்படி இப்படத்திற்கு பெயர் வைத்தீர்கள்?
அஸ்வந்த்: எந்த ஒரு வியப்பான, மகிழ்ச்சியான, சோகமான விஷயம் நடந்தாலும் அந்த உணர்வை வெளிப்படுத்த ‘Oh My God‘-னு சொல்லுவோம், அப்படி தான் இப்படத்திற்கும் இந்த பெயர் வந்தது.
அது மட்டுமில்லாமல் விஜய் சாரோட பாட்டில் அந்த வரிகள் வரும். அது என் மனதில் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருந்தது. அதுவும் ஒரு காரணம்.

வாணி வந்த கதை
இப்படத்தில் வாணி போஜன் எப்படி உள்ளே வந்தார் ?
அஸ்வந்த்: எந்த கதையை எடுத்து நடித்தால் தன ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற யோசனையில் வாணி இருந்தார். நாங்களும் கதாநாயகிக்கான தேடலில் இருந்தோம்.
நாங்கள் வாணியை தேடிப்போனோம் என்று சொல்வதை விட வாணி இப்படத்திற்கு தானாக அமைந்துள்ளார் என்று கூறலாம்.
இந்த படத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
வாணி : என்னுடைய Fans எல்லாரும் தெய்வமகள் மூலமா எனக்கு கிடைத்தவர்கள். நான் அடுத்து செய்யக்கூடிய விஷயம் தெய்வமகளை விட பெரிதாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.
அதுபோல என்னுடைய Fans-ஐயும் நான் திருப்திப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறேன். இந்நிலையில் இப்படம் பற்றி கேட்டறிந்தேன். என்னுடைய இப்படத்தின் Character எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் இப்படம் நடிக்க ஒற்றுக்கொண்டேன்.
நான் நடிக்கும் படங்கள் நல்ல படங்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறன்.
இப்படத்தில் வாணியின் Character-ஐ பற்றி கூறுங்கள்?
அஸ்வந்த்: என் கூட இப்படத்தில் வேலை செய்த அனைவருக்குமே தெரியும், எனக்கு இப்படத்தில் மிகவும் பிடித்தது வாணி நடித்த ‘மீரா’ கதாபாத்திரம் தான். அது மிகவும் வலிமையான ஒரு பெண்ணின் கதாபாத்திரம்.
பொதுவாக Feminism பேசுபவர்களை விட, அதை தன குணங்களில் வெளிப்படுத்துபவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு பெண்ணாக தான் வாணி இப்படத்தில் நடித்துள்ளார்.

மிகவும் Silent-ஆக இருக்கும் வாணியை எப்படி செட்டில் Maintain பண்ணீங்க?
அஸ்வந்த்: அவங்க Silent-லாம் கிடையாது. படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலேயே எனக்கு நெருக்கமான தோழியாக வாணி மாறிவிட்டார். எனக்கு வாணியை பற்றி எல்லாமே தெரியும்.
நட்பே துணை
இப்படத்தின் நாயகன் அசோக் செல்வன் பற்றி என்ன சொல்ல நினைக்கருறீங்க?
அஸ்வந்த்: எனக்கு அசோக் செல்வனை பத்து வருடங்களாக தெரியும். நான் குறும்படங்கள் எடுக்கும்போதே அவர் பெரிய நட்சத்திரமாகிவிட்டார். என்மேல் அவருக்கும், அவர் மேல் எனக்கும் நிறைய நம்பிக்கை இருக்கிறது.
அந்த நம்பிக்கை தான் இப்படம் உருவானதற்கு முக்கிய காரணம். என்னை நம்பி ஒரு படம் எடுக்க நம்பிக்கை கொடுத்தது எங்கள் நட்பு தான்.
இந்த படம் நடித்ததன் மூலம் நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் வாணி ?
வாணி : ஒரு வித்யாசமான நடிப்பை கற்றுக்கொண்டேன். கண்டிப்பாக ஒரு மாறுபட்ட வாணி போஜனை இந்த படத்தில் உங்களால் காண முடியும்.
முழு Interview-யை கீழே கண்டு மகிழுங்கள்