பெத்தராயுடு திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி #25YearsOfPedarayudu ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.


1994 ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், குஷ்பூ, மீனா, விஜயகுமார் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற்ற நாட்டாமை திரைப்படம் பெத்தராயுடு என்று பெயரில் தெலுங்கில் எடுக்கப்பட்டது…


1995 ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்குமார் கதாபாத்திரத்தில் மோகன்பாபு, குஷ்பூ கதாபாத்திரத்தில் பானுப்ரியா, மீனா கதாபாத்திரத்தில் சவுந்தர்யா மற்றும் விஜயகுமார் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ம் நடித்திருந்தனர்.
தமிழை போல, தெலுங்கிலும் மிக பெரிய வெற்றி பெற்ற பெத்தராயுடு திரைப்படத்தை ரவி ராஜா பினிசெட்டி அவர்கள் இயக்கி இருந்தார்.


நாட்டாமை திரைப்படம் பெற்ற வெற்றியை கண்டு தெலுகு நடிகர் மோகன்பாபுவிடம் நாட்டாமை தெலுங்கு ரைட்ஸை வாங்க சொல்லி, தெலுங்கிலும் நடித்து கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.


படம் வெளியாகி ஜூன் 15 தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பெத்தராயுடு படத்தின் நினைவுகள் மற்றும் 25 ஆண்டுகால வெற்றி கொண்டாட்டம் என படத்தின் புகைப்படங்களை இணையதளவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.
