M.R.ராதா , நம்பியார், ரகுவரன் போன்ற பல ஜாம்பவான்கள் வில்லன் கதாபாத்திரங்கள்ல நம்ம கோலிவுட் சினிமாவ கலக்கிட்டு இருந்த காலம் அது.ஹீரோக்களுக்கு இணையான மாஸ், ரசிகர்கள் கூட்டம், சம்பளம்னு இந்த மூணு வில்லன் நடிகர்களுக்கும் இருந்த வரவேற்பு தமிழ் சினிமால தவிர்க்க முடியாததா இருந்துச்சு
இப்படி வில்லன்களை கொண்டாடிட்டு இருந்த கோலிவுட் சினிமா வட்டாரத்துல அடுத்து யாரு இந்த இடத்துக்கு வரப்போறது அப்படின்ற கேள்வியும் வலம் வந்துச்சு. அந்த கேள்விக்கு பதில் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களால 1994-ல “டூயட் ” படம் மூலமா எழுதப்பட்டுச்சு. அடுத்த பல வருஷங்கள் தென்னிந்திய சினிமாவ வில்லன் கதாபாத்திரத்துல மிரட்டப் போற, குணத்திர கதாபாத்திரங்களால கவரப் போற ‘பிரகாஷ்ராஜ்’ என்ற ஒரு நடிப்பு ராட்சசன் கே.பாலச்சந்தர் அவர்களால தமிழ் சினிமால அறிமுகம் செய்யப்படுறாரு.
“Powerful People Comes From Powerful Places” இந்த ஒரு வசனம் KGF Chapter 1-ல வரும் இந்த வசனத்துக்கு ஏத்த மாதிரி நம்ம அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்துலருந்து வந்து நம்ம தமிழ் சினிமால வில்லனா அறிமுகமாகி இந்தியன் சூப்பர் ஸ்டாரா நம்ம தலைவர் ரஜினிகாந்த் எப்படி ஆனாரோ, அதே வழியா தமிழ் சினிமால வில்லனா அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தினு இந்திய அளவுல கொண்டாடப்படுற தலைசிறந்த நடிகனா மாறி இருக்காரு நம்ம பிரகாஷ்ராஜ்.

பிரகாஷ்ராஜோட வில்லனிசத்த் காட்டுறதுக்கு அருவா, கத்தி, துப்பாக்கி, அடியாட்கள் இது மாதிரி எதுவுமே தேவையில்ல. அதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு “ஆசை” திரைப்படம். அவரு பண்ற சின்ன சின்ன விஷயங்களாலயே நம்மல மிரட்டினாரு. தமிழ் சினிமால ரொம்ப முக்கியமான ஒரு படம் மணிரத்னம் இயக்கத்துல 1997-ல வந்த “இருவர்” திரைப்படம். இந்த படத்த சுத்தி பல சர்ச்சைகள் இருந்தாலும் பிரகாஷ்ராஜோட நடிப்பு அவருக்கு சத்தமே இல்லாம சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருத வாங்கி தந்துச்சு.
வில்லத்தனத்துல படத்துக்கு படம் வித்தியாசம் காட்டுறது பிரகாஷ்ராஜோட தனி ஸ்டைல்னு கூட சொல்லலாம். “1998”ல வந்த அந்தப்புரம் படத்துல நரசிம்மான்ற கேரக்டர்ல பிரகாஷ்ராஜ் பண்ணிண வில்லனிசம் அவருக்கு Special Jury தேசிய விருது வாங்கி தந்துச்சு. “அப்பு” படத்துல திருநங்கையா காட்டின வில்லத்தனம் பிரகாஷ்ராஜோட புகழ விண்ணளவு கொண்டு போச்சு.
குழந்தைகளுக்கு பிடிச்ச ஹீரோ,ஹீரோயின், குழந்தைகளுக்கு பிடிச்ச காமெடியன் இந்த வசனம்லா நாம கேட்டு பழகியிருப்போம். ஆனா குழந்தைகளுக்கு பிடிச்ச வில்லனா கில்லி படத்துல வந்த “முத்துப்பாண்டி” கதாபாத்திரம் பிரகாஷ்ராஜ் அவர்கள பட்டி, தொட்டி ,சிட்டினு எல்லார்கிட்டயும் கொண்டுபோய் சேர்த்துச்சு. தனலட்சுமி மனசுல முத்துப்பாண்டிக்கு இடம் இல்லைனாலும் 90’s kids மனசுல அவருக்கு கோட்டையே இருக்கு. இப்பவரைக்கும் #justiceformuthupandi அப்படினு மீம் கிரியேட்டர்ஸ் முத்துப்பாண்டிய கொண்டாடிட்டு தான் இருக்காங்க.

அதுக்கப்புறம் தளபதி விஜயோட ஆஸ்தான வில்லான மாறிட்டாரு பிரகாஷ்ராஜ். சிவகாசி “உடையப்பா”, போக்கிரி “அலிபாய்”னு இந்த காம்பினேஷன் தமிழ் சினிமால அதிகம் பேசப்பட்டுச்சு. மதுரைல முத்துப்பாண்டினா, சென்னைல “மயில்வாகனம்” சிங்கம் படத்துல சூர்யா, பிரகாஷ்ராஜ்க்கு நடுல வர ஒவ்வொரு சீனும் ரசிகர்கள் சூர்யாக்கு விசில் போடவா இல்ல பிரகாஷ்ராஜ்க்கு விசில் போடவானு யோசிக்க வச்சுது. அந்தளவு மாறி மாறி நடிப்புல பிண்ணியிருப்பாங்க.
பிரகாஷ்ராஜ் வில்லனா மட்டுமில்லாமா மொழி,வசூல்ராஜா MBBS, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்கள்ல காமெடியனாவும், காமெடி வில்லன் கதாபாத்திரத்திங்களும் பண்ணியிருக்காரு. M.குமரன் S/O மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம், அபியும் நானும் போன்ற படங்கள்ல எவ்வளோ நல்ல அப்பானு நம்மல Feel பண்ண வைக்குற மாதிரியும் நடிச்சிருக்காரு.
பிரகாஷ்ராஜ் என்ன அப்பா வேஷம், நல்ல குணச்சித்திர கதாபாத்திரமாவே நடிக்குறாருனு சினிமா ரசிகர்கள் யோசிக்கும் போது இந்த வில்லன் பிரகாஷ்ராஜுக்காடா End Cardu போடுறீங்க, எனக்கு Endஏ கிடையாதுனு பூலோகம், பரத் என்னும் நான், தூங்காவனம், இஞ்சி இடுப்பழகி, மனிதன், வேலைக்காரன், பாவக்கதைகள்னு இப்ப வரைக்கும் அவரோட வில்லனிசத்த காட்டிட்டு இருக்காரு.

இப்ப நாம அதிகம் ரசிச்ச பிரகாஷ்ராஜ் வசனங்கள பாப்போம்!
“ஹாய் செல்லம் ஐ லவ் யூ டி லவ் யூ”.
“What is that மாமு”
“தாம்பரத்துல தட்டுனா பாரிஸ் எகிரும் இது மயில்வாகனம் கோட்டை “
“அதெல்லாம் சொல்லக்கூடாது அதெல்லாம் சொல்லக்கூடாது அதெல்லாம் ஏன் சொல்ற நீ”
“சிவாஜிய பாத்திருக்கேன்! எம்ஜியார பாத்திருக்கேன்! ரஜினிய பாத்திருக்கேன்! கமல பாத்திருக்கேன்! ஆனா உன்ன மாதிரி ஒரு நடிகன பாத்ததே இல்லடா”
“நான் தூங்கல தூங்கல தூங்கல, தூங்தடாடாடா”

“உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
என்னூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி
பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே”
இதுபோல பல ஹிட்டான பிரகாஷ்ராஜ் வசனங்கள சொல்லிக்கிட்டே போகலாம் ஏன்னா அந்தளவு வில்லனா, சிறந்த குணச்சித்திர நடிகனா நாம பிரகாஷ்ராஜ் அவர்கள ரசிச்சுருக்கோம்.
இந்திய சினிமால 5 தேசிய விருதுகள் வாங்கின நம்ம பிரகாஷ்ராஜ் இன்னும் பல விருதுகள், இன்னும் பல நல்ல கதாபாத்திரங்கள் மூலமா மேலும் பல உயரத்தையும் ரசிகர்களோட இதயத்தையும் தொட சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.