உலகெங்கும் வானொலி தினம் பிப்ரவரி 13 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் சூரியன் FM வானொலி தினத்தை பார்வையற்றவர்களுக்காக சமர்பிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
இசையை உணரும் ஒவ்வொரு ரசிகரும் ரசனை மிக்க கலைஞன் ஆகிறான். உலகை காண முடியாத பலருக்கும் உலகை உணரச்செய்யும் இசையை செவிகளில் சேர்க்கும் சேவையை பல வருடங்களாக உங்கள் சூரியன் FM செய்து வருகிறது.
இந்த வானொலி தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திரைப்பட பாடகர்கள் வைக்கம் விஜயலட்சுமி மற்றும் திருமூர்த்தி ஆகியோர்கள் நம் பண்பலையின் செம ரகளை மற்றும் மெலோடிஸ் மட்டும் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பேசவுள்ளனர்.
இந்த வானொலி தினத்தை நமது சூரியன் FM உடன் இணைந்து நீங்களும் கொண்டாடுங்கள்.
உள்ளொளியால் இவ்வுலகத்தை காணும் பார்வைத்திறன் சவால் உடையவர்களுக்கு உலக வானொலி தினத்தை சமர்ப்பணம் செய்கிறது உங்கள் சூரியன் பண்பலை.
