Cinema News Stories

கொரோன தடுப்பூசி போட்டுக்கொண்டார் சூப்பர்ஸ்டார் !!

கொரோனா வைரஸ்-ன் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்ளுமாறு அரசாங்கமும் பல்வேறு மருத்துவ நிபுணர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தடுப்பூசியை இன்று போட்டுக் கொண்டார். இவர் தடுப்பூசி போடும்போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களது ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதற்கு முன்பு நடிகர்கள் அருண் விஜய், மோகன்லால், ஜீவா, நாகர்ஜுனா மற்றும் பல நட்சத்திரங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

ரஜினிகாந்த் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி இருக்கும் புகைப்படம் அவரது ரசிகர்களால் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படத்தை சூப்பர் ஸ்டாரின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நமது தலைவர் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார், நாம் அனைவரும் சேர்ந்து கொரோனா உடனான போரில் வென்று காட்டுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

About the author

alex lew