வாழ்க்கையில் ஆயிரம் தடைகளப்பா. தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா. இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ ரத்தன் டாட்டா-க்கு நல்லாவே பொருந்தும். 1937 டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி குஜராத்தில் பிறந்தவர் தான் ரத்தன் டாட்டா.
சின்ன வயசிலேயே அப்பாவும் அம்மாவும் விவாகரத்து வாங்கி பிரிஞ்சிடாங்க. அதுக்கப்புறமா தன்னையும், தன்னுடைய சகோதரனையும் வளர்த்தது அவருடைய பாட்டி தான். சின்ன வயசுல இருந்தே கார் மேல அதிக ஆர்வம் இருந்ததால மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கலாம்-னு அமெரிக்கா போனார் ரத்தன் டாட்டா.

தன்னோட பாட்டி வளர்ப்பு-ல வளர்ந்ததால பெண்களை மதிக்கிறது, நற்பண்புகள்-னு எல்லாத்துலயும் நல்ல விஷயங்களை மட்டும் focus பண்ணி வளர்ந்துட்டார். 1991 டாட்டா குரூப் ஆஃப் கம்பெனி, ரத்தன் டாட்டா ஓட நிர்வாகத்துக்கு அடியில் வந்தது. இது குறித்து நிறைய பேர் விமர்சனம் சொல்ல ஆரம்பிச்சாங்க. அவங்க சொன்னதுக்கு அப்படியே எதிரா டாட்டா குரூப் ஆஃப் கம்பெனிஸ் பெரிய வளர்ச்சியை பார்த்தது.
தேசப்பற்றும், தன்னுடைய நாட்டிலே உள்ள எல்லாரும் எல்லா விதமான வசதிகளையும் அனுபவிக்கனுங்கிற எண்ணத்தில் NANO car உருவாக்கினார். இவரோட வளர்ச்சியை பத்தி பெருசா பேசணும்னு அவசியமில்லை, அந்தளவுக்கு வளர்ந்து விட்டார்.
காதலில் தோத்தவன் வாழ்க்கையில ஜெயித்திடுவானு சும்மாவா சொன்னாங்க. இது ரத்தன் டாட்டா ஓட வாழ்க்கை- ல நிரூபணம் ஆயிடுச்சு. அமெரிக்கால காலேஜ் படிக்கும்போது காதல் வயப்பட்டார் ரத்தன் டாட்டா, ரத்தன் டாட்டாவும் தன்னோட காதலியும் திருமணம் வரைக்கும் போய் இருக்காங்க. ஆனா பாட்டியோட அனுமதி இல்லாம கல்யாணம் பண்ணிக்க கூடாது என்ற முடிவு எடுத்து wait பண்ணலாம்-னு wait பண்ணாரு.

ஆனா காலம் இதுக்கு ஒத்துழைக்கல, இந்தியாவுல இருந்து பாட்டி கூப்பிடவும் தன்னோட காதலிக்கிட்ட போய் சொன்னா, மறுபேச்சு சொல்லாம தன் கூட வந்துருவாங்க என்ற நம்பிக்கை-ல போய் கேக்குறாரு. ஆனா அந்த சமயத்துலதான் இந்தியா சீனா போர் நடந்துட்டு இருந்தது. இந்தியாவுடைய சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் ரத்தன் டாட்டாவோட காதலி வீட்டில இந்தியாவுக்கு செல்ல மறுப்பு தெரிவிக்க, பாட்டி தான் முக்கியம்-னு ரத்தன் டாட்டாவும் இந்தியா கிளம்பி போய்விட்டார்.
அன்னையிலிருந்து இன்னைக்கு வரைக்கும் ஒரு பொண்ண கூட ஏரெடுத்து பாக்கல ரத்தன் டாட்டா. மக்களுக்கு உதவி செய்வது, தேசப்பற்று மற்றும் இவரது நற்பண்புகள் இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டுனே சொல்லலாம். கோவிட் காலகட்டத்துல எக்கச்சக்கமான பேருக்கு உதவி பண்ணியிருக்காரு.

அது மட்டுமா, ஒரு தருணம் மேனேஜருக்கு கோவிட் வந்து இருக்குன்னு தெரிஞ்ச உடனே, சரி ஆக விட்டு வீடு தேடிப் போய் நலம் விசாரித்து இருக்காரு. இவருக்கு இப்போ 80 வயசுக்கு மேல ஆகுது. கண்டிப்பா இவருடைய Life Story, ஸ்டார்ட் அப் தொடங்கணும் அப்படின்னு ஆசைப்படுற இளைஞர்களையும் தாண்டி எல்லாருக்கும் ஒரு Inspiration ஆக இருக்கும்.
ரதன் டாடா அவர்களுக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.